மனசாட்சி இல்லாம கேக்குறீங்களேயா..- சிம்புவையே அலறவைத்த இயக்குனர்..!
தமிழில் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளானாலும் கூட தொடர்ந்து பல வருடங்களாக நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் சிம்பு தொடர்ந்து மனரீதியாக மிகவும் கஷ்டப்பட்டார்.
அந்த சமயத்தில் அவரது உடல் எடையும் கூட வெகுவாக அதிகரித்தது. பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்தது. அந்த சமயத்தில்தான் பத்துதல திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தயாரிப்பாளர் ஞானவேல் சிம்புவை தொடர்பு கொண்டு அந்த படத்தில் நடிக்க சொன்னவுடன் சிம்புவும் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
பத்துதல படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. பத்துதல படத்தில் வரும் கதாபாத்திரத்திற்கு சிம்பு சற்று உடல் பருமனாக இருக்க வேண்டும் என்பதால் உடல் எடையை அப்படியே வைத்து அந்த படத்தில் நடித்துவிட்டார். அதன் பிறகு அவர் மாநாடு படத்தில் நடிக்க வேண்டி இருந்தது. மாநாடு திரைப்படத்திற்காக உடல் எடையை வெகுவாக குறைத்தார் சிம்பு.
அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்:
மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்த சமயத்தில் பத்துதல திரைப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சிம்புவிடம் வந்து பத்துதல படத்தின் விடுப்பட்ட சில காட்சிகளை எடுக்க வேண்டும். அதற்காக உங்கள் எடையை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிம்பு, மனசாட்சி இல்லாம கேக்குறீங்களேயா, ஒவ்வொரு கிலோ எடையை குறைக்கவும் நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும். ரெண்டு வேளை மட்டும் சாப்பிட்டு உடம்பை குறைச்சிருக்கேன் என கூறியுள்ளார். ஆனால் பத்துதல படத்தை முடிக்க வேண்டும் எனில் கண்டிப்பாக உடல் எடையை அதிகரிக்க வேண்டும்.
எனவே மீண்டும் உடல் எடையை அதிகரித்து பத்துதல படத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. ஒரு காலத்தில் படப்பிடிப்புக்கே சரியாக வராதவர் என பெயர் வாங்கியவர், தற்சமயம் சினிமாவிற்காக இவ்வளவு மெனக்கெடுகிறாரே என பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது இந்த நிகழ்வு.