முதல் ஆளா சிம்புவா? நம்பிக்கை அதானே எல்லாம்.. கமலால் நடந்த அதிசயம்..

by Akhilan |   ( Updated:2024-08-20 05:13:30  )
முதல் ஆளா சிம்புவா? நம்பிக்கை அதானே எல்லாம்.. கமலால் நடந்த அதிசயம்..
X

#image_title

Thuglife: நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களிலும் இருக்கும் பிரச்சனை தற்போது தக்லைஃப் திரைப்படத்தில் ஏற்படாமல் படக்குழு சுமுகமாக ஒரு விஷயத்தை முடித்து இருக்கிறது.

நடிப்பு முதல் நடனம் வரை எல்லாவற்றிலும் மாஸ் கிளப்பும் நடிகர் என்றால் சிலம்பரசன் தான். ஆனால் அவர் மீது திரையுலகம் அதிகமாக கொடுக்கும் குற்றச்சாட்டு சரியாக படபிடிப்பிற்கு வர மாட்டார் பட குழுவுடன் இணைந்து இணங்கி செல்ல மாட்டார் என்பதுதான்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு இன்னும் 2 நாளில் அடுத்த சேதி காத்திருக்கு… ஆனால் ஃபீல் பண்ணுவீங்க!..

ஆனால் நடிகர் சிம்பு தன்னுடைய இரண்டாவது இன்னிங்சாக மாநாடு திரைப்படத்தை தொடங்கியதில் இருந்து தன்னுடைய கவனத்தை முழுவதும் படத்தில் ஈடுபாடாக கொடுத்து வருகிறார். அதன் விளைவாக மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என எல்லா திரைப்படங்களுமே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தற்போது நடிகர் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ஒரு படத்தினை தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் அப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரு வேடங்களிலும் சிலம்பரசன் தான் நடிக்க இருக்கிறார்.

#image_title

இந்நிலையில்தான் நடிகர் சிம்பு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக்லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்தார். இதன் முதற்கட்ட போஸ்டர் இணையத்தில் கசிந்த நிலையில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். பரபரப்பாக நடந்த இப்படத்தின் சூட்டிங்கில் சிம்பு தன்னுடைய பாகத்தை 90 சதவீதத்தினை முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் என்னிடம் நாலுமுறை அப்படி பண்ணார்… சங்கீதா கிரிஷை சங்கடப்படுத்திய சம்பவம்…

Next Story