আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

விஷாலையே ஓவர்டேக் செய்த சிம்பு!.. இன்னும் அஜித் மட்டும் தான் பாக்கி.. விஜயகாந்த் வீட்டில் எஸ்டிஆர்!

Published on: January 26, 2024
---Advertisement---

கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து சிம்பு ஒரு வழியாக சென்னைக்கு திரும்பியிருக்கிறார். சமீபத்தில் விஷால் விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு நினைவேந்தல் நிகழ்ச்சியையும் நடிகர் சங்கத்தை வைத்து நடத்தி விட்டார்.

நடிகர் சங்கம் சார்பாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வர முடியாத அளவுக்கு வெளிநாட்டில் பிசியாக இருந்த சிம்பு இன்று சென்னை திரும்பிய நிலையில், கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சிம்பு பிரேமலதா மற்றும் விஜயகாந்த் மகன்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டு வந்தார்.

இதையும் படிங்க: இவர விட்டா இப்போ யாரு? அஜித்தின் அடுத்த வில்லன் இந்த நடிகர் தானா? மாஸா இருக்குமே…

இளையராஜா மகள் பவதாரிணியின் உடல் சென்னையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிம்பு அங்கேயும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி மாதம் எஸ்டிஆர் 48 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், அதற்கான பயிற்சியில் இதுவரை இருந்து வந்த சிம்பு தற்போது வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியிருக்கிறார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் மீது வந்த கோபம்.. படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய இயக்குனர்.. அப்புறம் நடந்தது இதுதான்!..

விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டதுமே நடிகர் சிம்பு எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்தார். மேலும், தனது தந்தை டி. ராஜேந்தரை விஜயகாந்த் மறைவுக்கு நேரில் செல்ல வேண்டும் என வலியுறுத்தியதாக டி. ராஜேந்தரே கூறியிருந்தார்.  விஷால், சிம்பு உள்ளிட்டோர் வந்த நிலையில், இன்னமும் அஜித் மட்டும் தான் மிஸ்ஸிங் அவர் எப்போது வருவார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள எஸ்டிஆர் 48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் பிப்ரவரி 3ம் தேதி வெளியாகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.