Connect with us
simbu

Cinema News

நடிகர் சிம்பு இத்தனை படங்களை தவற விட்டுள்ளாரா? அத்தனையும் ஹிட் படமாச்சே….!

கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து தோல்வி படங்களை வழங்கி வந்த சிம்பு கடந்தாண்டு தான் மாநாடு என்ற ஒரு தரமான வெற்றி படத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து தற்போது கொரோனா குமார், பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் முன்னதாக சிம்பு தவறவிட்ட படங்கள் குறித்த பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

thimiru

திமிரு – தருண் கோபி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திமிரு படத்தில் சிம்புவை தான் முதலில் ஹீரோவாக நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் சிம்பவால் நடிக்க முடியாமல் போனதால் அந்த படத்தில் விஷால் நடித்திருந்தார். படம் செம ஹிட்டு.

ko movie

கோ – ஜீவா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோ படத்தை இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கி இருந்தார். இந்த படத்தில் முதலில் சிம்பு நடிக்க இருந்ததாம் பின்னர் ஏதோ சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போகவே ஜீவா அந்த படத்தில் நடித்துள்ளார்.

nanban movie

நண்பன் – விஜய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டில் வெளியான நண்பன் படம் மெகா ஹிட் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் ஜீவா கேரக்டரில் நடிக்க படத்தின் இயக்குனர் சங்கர் முதலில் சிம்புவை தான் கேட்டுள்ளார். ஆனால் சில காரணங்களால் சிம்புவால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

vettai

வேட்டை – மாதவன், ஆர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான வேட்டை படத்தின் முழு கதையையும் இயக்குனர் லிங்குசாமி முதலில் சிம்புவிடம் தான் கூறியிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் கால்ஷீட் பிரச்சனை இருந்ததால் சிம்புவால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம்.

vada chennai

வட சென்னை – தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை படத்தில் சிம்பு தான் தனுஷிற்கு பதிலாக நடிக்க இருந்தார். இருப்பினும் சிம்பு சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது. நடித்திருந்தால் சிம்புவிற்கு நிச்சயம் வேற லெவல் ஹிட்டாக இருந்திருக்கும்.

சிம்பு தவறவிட்ட அத்தனை படங்களும் மெகா ஹிட் படங்கள் தான். ஏன் இந்த நல்ல கதைகளை அவர் தவறவிட்டார் என்று தெரியவில்லை. இருப்பினும் சிம்பு மிகப்பெரிய தவறிழைத்து விட்டார் என்பது மட்டும் புரிகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top