படப்பிடிப்பிற்கு சிம்பு லேட்டா வருவதே இதனால் தான்!.. உண்மையை போட்டுடைத்த தாய்க்குலம்..
தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது வரை சினிமாவை தன் உயிரினும் மேலாக நேசிக்கக் கூடிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் தெரியாததே இல்லை என்று சொல்லலாம்.
அந்த அளவு சினிமா நுணுக்கங்களை தெரிந்து வைத்தவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக, ஹீரோவாக, இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக, இசையமைப்பாளராக தன் தந்தையையும் மிஞ்சிய பிள்ளையாக வளர்ந்து நிற்கிறார் சிம்பு.
இன்று அனைவரும் கொண்டாடும் நடிகராக இருக்கும் சிம்பு ‘பத்து தல’ படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் பத்து தல படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது. விழாவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மாலை 6 மணி அளவில் ஆரம்பமாக வேண்டிய விழாவிற்கு மதியம் 2 மணிக்கே வந்து அனைவரையும் சர்ப்ரைஸ் செய்தார் சிம்பு. சிம்பு என்றாலே தாமதம் என்ற ஒரு பெயர் ஒட்டிக் கொண்டிருக்கும். முன்பெல்லாம் அவரை பற்றிய சர்ச்சைகளில் மிக முக்கியமானது எப்பொழுதும் சிம்பு படப்பிடிப்பிற்கு தாமதமாகத்தான் வருவார் என்று.
காலை படப்பிடிப்பு என்றால் 12 மணிக்கு தான் வருவார் என்று ஏகப்பட்ட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பல பேட்டிகளில் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதற்கான காரணத்தை முதன் முதலில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்திரன் கூறியிருக்கிறார். அதாவது ‘ நாங்களே நிறைய படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறோம். உதாரணமாக வடிவேலுவுக்கு 11 மணி படப்பிடிப்பு என்றால் அதற்கு முன்னதாக எடுத்த பல காட்சிகளில் தாமதம் ஏற்பட்டால் வடிவேலுவுக்கு போன் செய்து கொஞ்சம் தாமதமாக வந்து விடுங்கள் என்று கூறிவிடுவோம்,
அதே போல் சிம்புவின் படப்பிடிப்பு சமயத்தில் காலை எதாவது லைட்டிங் செட்டப் வைக்க தாமதம் ஏற்பட்டால் இயக்குனர் சிம்புவுக்கு போன் செய்து கொஞ்சம் தாமதமாக 12 மணிக்கு வாருங்கள் என்று சொல்வார். அதன் காரணமாகத்தான் சிம்பு தாமதமாக போவாரே தவிர லேட்டா போக வேண்டும் என்ற எண்ணத்தில் போக மாட்டார், மேலும் சரியான நேரத்தில் செல்லக் கூடிய நடிகர் சிம்பு என்றும், மக்களிடம் தேவையற்ற வதந்திகளை பரப்பவே இப்படியெல்லாம் பேசினார்கள் என்றும் உண்மை கண்டிப்பாக ஜெயிக்கும்’ என்றும் ஆவேசமாக கூறினார்.
இதையும் படிங்க : வாலிக்கு அந்த பெயரை வச்சது யார் தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்….