‘பத்து தல’ ஆடியோ லாஞ்சில் சிம்புவின் எண்ட்ரி இப்படித்தான் இருக்கும்!.. எதிர்பார்ப்பை எகிற வைத்த இயக்குனர்.
ஓபிலி கிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக்,கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம் ‘பத்து தல’. முதலில் இந்தப் படத்தை கன்னட படமான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்காக எடுக்கும் திட்டத்தில் தான் இருந்தார்கள். அதற்காக வேறொரு இயக்குனரை வைத்து 15 நாள்கள் படப்பிடிப்புகள் எல்லாம் நடந்து முடிந்திருக்கின்றன.
ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அதில் திருப்தி இல்லாமல் தான் ஓபிலி கிருஷ்ணா இந்தப் படத்திற்குள் வந்திருக்கிறார். ஆனால் அவர் படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் மாற்றி முதலில் இருந்து அவரோட பாணியில் படத்தை எடுத்திருக்கிறாராம்.
முதலில் கௌதம் கார்த்திக் ஹீரோ என்றிருந்த நிலையில் சிம்பு இந்தப் படத்தில் நுழைந்தது இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. மேலும் எப்பவும் இல்லாமல் கௌதம் மேனன் பக்கா வில்லனாக நடித்திருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்தப் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சிம்புவை பற்றி கூறும் போது கேட்கவே இனிமையாக இருந்தது.
அதாவது பக்கா ஜெண்டில்மேன் என்றும் டெடிகேட்டான நடிகர் என்றும் கூறினார். மேலும் ஏற்கெனவே வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்பு எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு உடம்பை குறைத்தார்? ஆனால் பத்து தல படத்திற்கு 41 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருப்பதால் கொஞ்சம் உடல் எடை கூட்ட வேண்டும் என சொன்னாராம் இயக்குனர்.
ஒன்றும் சொல்லாமல் இந்தப் படத்திற்காக சற்று உடல் எடையை அதிகரித்து வந்து நின்னாராம் சிம்பு. மேலும் மீண்டும் பேங்காங்கில் மார்சல் ஆர்ட்ஸ் போன்ற கலைகளை கற்றுக் கொண்டிருக்கிறார். தன் உடம்பை குறைப்பதில் மீண்டும் தீவிரம் காட்டி வருகிறார். இதை பற்றி கூறிய இயக்குனர் கிருஷ்ணா ‘பத்து தல ஆடியோ லாஞ்சிற்கு சிம்பு வருவார் பாருங்க, நீங்களே வாயடைச்சு போய்டுவீங்க, அந்த அளவுக்கு ஒரு வித்தியாசமான கெட்டப்பில் வந்து இறங்குவார்’ என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதையும் படிங்க : பீரில் கலந்து கொடுத்த விஷம்!. சூனியம் வைத்த சொந்த அண்ணன்.. ஐயோ பாவம் பொன்னம்பலம்!…