அந்த சீன்ல ரோலக்ஸ் சூர்யாவாக சிம்பு வருவார்... கொஞ்சம் ஓவராக பேசிய தேசிய விருது நடிகர்.!

by Manikandan |
அந்த சீன்ல ரோலக்ஸ் சூர்யாவாக சிம்பு வருவார்... கொஞ்சம் ஓவராக பேசிய தேசிய விருது நடிகர்.!
X

இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகாவின் 50 திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் "மஹா". இந்த திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக விருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமலே இருந்தது.

ஒரு வழியாக படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்கங்களில் வெளியாக உள்ளது. படத்தில் ரேஷ்மா பசுபதி, சனம் ஷெட்டி, தம்பி ராமையா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தம்பி ராமையா விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் வந்தது போல மஹா படத்தில் சிம்பு வருவார் என பேசி உள்ளார்.

இதையும் படியுங்களேன்- ஐயோ வெட்க வெட்கமா வருதே.. அந்த நடிகரை பார்த்து வழியும் சாய் பல்லவி..

விக்ரம் படத்தின் இறுதிக்காட்சியில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கெத்தான லுக்கில் சூர்யா வருவார். அதனை பார்த்த சில ரசிகர்கள் கமல்ஹாசனேயே மறந்து சூர்யாவை தான் பாராட்டினார்கள்.

இந்த நிலையில், தம்பி ராமையா விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் வந்தது போல மஹா படத்தில் சிம்பு வருவார் என பேசியதை பார்த்த நெட்டிசன்கள் தம்பி ராமையா கொஞ்சம் ஓவராக பேசுகிறாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர் மைனா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் என தேசிய விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story