சூப்பர் பட வாய்ப்பை தவறவிட்ட சிம்பு... என்ன சிம்பு இப்படி பண்ணிட்டீங்க?
சினிமாவில் எப்போது யாருக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகும் யாருக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆகும் என்பதே தெரியாது. அந்த வகையில் நடிகர் சிம்புவிற்கு கடந்த சில காலமாகவே மோசமான கெட்ட நேரம் தான் இருந்தது போல. தொடர் தோல்வி உடல் எடை அதிகரிப்பு என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.
பின்னர் கடந்தாண்டு தான் மாநாடு என்ற படம் மூலம் யாரும் எதிர்பாராத வெற்றியை வழங்கி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அவரின் திரை வாழ்க்கையில் இதுவரை காணாத வெற்றியை மாநாடு படம் அடைந்தது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்தது.
இதனையடுத்து தற்போது அவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்பு ஒரு சூப்பர் பட வாய்ப்பை தவறவிட்டுள்ள செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் அதன்படி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் பட வாய்ப்பை தான் சிம்பு தவறவிட்டுள்ளார்.
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் கிராமத்து பின்னணியில், உறவுகளின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் உருவாகியுள்ளது. மேலும் இப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் தான் இந்த பட வாய்ப்பை சிம்பு தவறவிட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் பாண்டியராஜ் இப்படத்தின் கதையை முதலில் நடிகர் சிம்புவிற்காகதான் எழுதினாராம். ஆனால் அப்பொழுது அவர் வேறு ஒரு படத்தில் நடித்ததால் இதில் நடிக்க முடியவில்லையாம். அதன் பின்னர் தான் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார்.