சிம்புவுக்கு இப்படி ஒரு தண்டனையா?.. உன்னை நம்பித்தானே அனுப்புனேன்?.. தயாரிப்பாளரை மூக்குடைத்த உஷா..

by Rohini |
simbu
X

simbu

ஒரு கம் பேக் மூலமாக மீண்டும் அசுர வேகத்தில் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு. அதுவும் சமீபத்தில் அவரின் கெட்டப் அனைவரையும் ஆச்சரியப்படுத்த வைத்தது. அதிலும் குறிப்பாக பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது சிம்பு பேசிய பேச்சு தான் ஹைலைட்.

simbu1

simbu1

இதுவரை எப்படியோ இருந்ததாகவும் இனிமேல் அப்படியெல்லாம் இருக்க மாட்டேன் என்றும் கூறினார். மேலும் ரசிகர்களை மகிழ்விப்பதே தனது தலையாய கடமையாக கருதுகிறேன் என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் வேற மாதிரி வந்திருக்கிறேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில் பத்து தல படத்தில் சிம்புவை பற்றிய பேச்சு தான் அனேக இடங்களில் அடிபட்டு வருகிறது. ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு , கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோரது நடிப்பில் தயாரான படம் தான் பத்து தல.

simbu2

simbu2

இந்தப் படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடி கிடையாது. அதை குறிப்பிட்டு மேடையில் பேசிய சிம்பு எனக்கு வாழ்க்கையிலும் துணை கிடையாது, இந்தப் படத்திலயும் துணை கிடையாது என்று நக்கலாக பேசியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவிடம் சிம்புவின் தாய் உஷா சிம்புவின் திருமணம் பற்றிய பேச்சை பேசியிருக்கிறார். அதாவது இதற்கு முன்பு ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் வெளியான படங்களான ‘சில்லுனு ஒரு காதல்’ படம் ரிலீஸ் ஆன மூன்றாவது நாளில் தான் சூர்யா-ஜோதிகாவின் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

simbu3

simbu3

அதே போல் ‘கஜினிகாந்த்’ படமும் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் வெளியான படம் தான். அந்தப் படத்திற்கு பிறகு தான் ஆர்யா-சாயிஷாவின் திருமணமும் நடைபெற்றிருக்கிறது. மேலும் ‘தேவராட்டம்’ படம் ரிலீஸுக்கு பிறகு தான் கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணமும் நடைபெற்றிருக்கிறது. இதை குறிப்பிட்டு பேசிய உஷா

ஞானவேல் ராஜாவிடம் ‘உன்னை நம்பித்தான சிம்புவை இந்தப் படத்தில நடிக்க வச்சேன், கடைசியில் படத்துலயே அவனுக்கு ஜோடி இல்லாம பண்ணிட்டீயே ?’ என்று நக்கலாக கேட்டாராம். இதை ஞானவேல் ராஜா ஒரு பேட்டியின் போது கூறினார்.

இதையும் படிங்க : களைகட்ட போகும் ‘லியோ’ படத்தின் புரோமோஷன்!.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்..

Next Story