சிம்புவின் தலையெழுத்தை தீர்மானிக்க போவதே ‘பத்து தல’ படம் தான்!.. என்ன விஷயம் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது பத்து தல படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து படத்தின் புரோமோவிற்காக விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். முன்பை விட சிம்பு தற்போது மிகவும் உற்சாகமாக பாஸிட்டிவிட்டியான தன்மையுடனும் இருந்து வருகிறார்.
ரசிகர்களுக்காகவே இருக்கிறேன் என்பதை அவ்வப்போது மேடைகளில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தனிக்காட்டு ராஜா என்பதை மிகவும் பெருமையாகவும் கூறிவருகிறார். இந்த நிலையில் பத்து தல படத்திற்கு பிறகு ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய படத்திலும் இணைந்திருக்கிறார்.
அந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி தான் இயக்குகிறார். ஏற்கெனவே ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளிவந்த படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பதற்கான திட்டமும் இருந்தது. ஆனால் அது கண்டிப்பாக வராது என்பதை சிம்பு சமீபத்தில் பேசியதன் மூலம் தெரிகிறது. சிம்புவிற்கும் கௌதம் மேனனுக்கு இடையே ஏதோ பிரச்சினைகள் அந்தப் படத்தின் போது இருந்ததாம். அதனாலேயே அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறி வருகிறார்கள்.
ஆனால் உண்மையிலேயே காரணம் என்னவெனில் வெந்து தணிந்தது காடு சொல்லும் படியான வசூலை அள்ளவில்லையாம். சும்மா பேருக்கு தான் வெற்றி விழாவை கொண்டாடியிருக்கின்றனர். அந்தப் படத்திற்கு பிறகு சிம்பு 40 கோடி சம்பளம் கேட்டாராம். அதனாலேயே இரண்டாம் பாகம் எடுப்பதற்கான திட்டத்தை தற்போது தள்ளி வைத்திருக்கிறாராம் ஐசரி கணேஷ்.
மேலும் பத்துதல படம் ஒரு வேளை வெற்றியடைந்தால் சிம்பு இன்னும் சம்பளத்தை உயர்த்த வாய்ப்பிருக்கிறதாம். அதனாலேயே பத்து தல படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெந்து தணிந்தது காடு படத்தின் நிலைமை என்ன என்பது தெரியும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : எஸ்.பி.பியால் எம்.ஜி.ஆருக்கு இப்படி ஒரு சிக்கல் வந்ததா… என்ன இருந்தாலும் இப்படியா பண்றது?
இதனிடையில் கமலும் சளைச்சவர் இல்லை, பத்து தல படம் மாபெரும் வெற்றி அடைந்தால் சிம்புவுடனான கூட்டணி தொடரும். ஒருவேளை எதிர்பாராதது நடந்தால் கமல் சும்ம இருப்பாரா? கிடப்பில் போடக் கூட வாய்ப்பிருக்கிறது என்று திரைவிமர்சகர் ராமானுஜம் ஒரு பேட்டியில் கூறினார். என்ன இருந்தாலும் பத்து தல படத்தின் ரிலீஸ் தான் சிம்புவின் கெரியரை தீர்மானிக்க போகிறது.