அன்னை தெரசா வேடத்தில் சிம்ரனா? ஆனா படம் வசூல் செய்யுமா என்பது சந்தேகம் தான்...
தமிழ் சினிமாவின் ஒல்லி பெல்லி நாயகிகளின் முதல் ஆளாக இருந்தவர் சிம்ரன். இவர் அன்னை தெரசாவின் பயோபிக்கில் நடிக்கலாம் எனக் கூறி இருக்கிறார் சித்ரா லட்சுமணன்.
சிம்ரனின் திரை பிரவேசம்:
சிம்ரன் தமிழில் நடிக்க வருவதற்கு முன்னரே இந்தியில் நன்கு அறிமுகமானவர். ரிஷிபாமா என்ற பெயரை சினிமாவிற்காக சிம்ரன் என மாற்றிக்கொண்டார். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார்.
இந்தியில் இவரின் முதல் சனம் ஹர்ஜாய் தோல்வி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து கன்னட சினிமாவிலும் கால் பதித்தார். அவர் நடித்த தேரே மேரே சப்னே முதல் வெற்றிப் படமாகும். அடுத்த சிம்ரனின் எண்ட்ரி மலையாள திரையுலகிற்கு தான். இதை தொடர்ந்தே, விஜய் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ் நாயகியாக உள்ளே வந்தார். முதல் படமே அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
சிம்ரன் நடிப்பில் வெளியான எல்லா தமிழ் படங்களுமே வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அதனால் தான் அந்த காலக்கட்டத்தில் அதிகம் சம்பளம் வாங்குபவராக சிம்ரன் இருந்தார்.
சிம்ரனின் இரண்டாவது இன்னிங்ஸ்:
சினிமாவின் பீக்கில் இருக்கும் போதே அவரின் பள்ளி தோழர் தீபக்கை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒன்ஸ்மோர் படத்தில் விஜய் நாயகியாக எண்ட்ரி கொடுத்தவர், உதயா படத்தில் அவரின் நாயகியாவே திரை வாழ்க்கையில் இருந்து வெளியேறினார்.
பின்னர் சில வருடம் கழித்து கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவருக்கு பட்டு கம்பளம் விரித்து தான் திரையுலகம் வரவேற்றது. அவரின் இரண்டாவது இன்னிங்ஸிலும் வாரணம் ஆயிரம், பேட்ட என ஹிட் படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி படம் மிகப்பெரிய வரவேற்பை சிம்ரனுக்கு பெற்று தந்தது.
அன்னை தெரசா பயோபிக்:
இந்நிலையில் அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறு படமானால் அதில் கண்டிப்பாக சிம்ரன் நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது யு ட்யூப் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்க வேண்டும் என்பதால் அதை எடுத்தால் அத்தனை வசூலை அது பெருமா என்பதில் சந்தேகம் தான் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.