திரையுலகில் சிம்மகுரலோடு வலம் வந்த சிவாஜி. இவர் ஏற்காத கதாபாத்திரம் இல்லை. பல கதாபாத்திரங்களை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர். நாடகங்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்குள் வந்தவர். முதல் படமான பராசக்தியிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகையும், ரசிகர்களையும் கவனிக்க வைத்தார். முதல் படத்திலேயே பக்கம் பக்கமாக வசனம் பேசி ரசிக்க வைத்தார். அதன்பின் பல படங்களில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகர் திலகமாக மாறினார்.
வயதான பின் அவர் குறைவான படங்களில் மட்டுமே நடித்தார். அதில் ஒன்றுதான் விஜயின் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம். இப்படத்தில் ஹீரோவாக விஜயும், கதாநாயகி்யாக சிம்ரனும் நடித்திருக்க, சிவாஜி குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த சிம்ரன் அப்போதுதான் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய நேரம். அவருக்கு சிவாஜியை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. பொதுவாக காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என சொல்லிவிட்டால் 6.15 மணிக்கே மேக்கப்புடன் தயாராக இருப்பது சிவாஜியின் பழக்கம். ஒருநாள் அவர் அப்படி வந்துவிட சிம்ரன் 9.30 மணிக்கு வந்துள்ளார். அவருக்காக சிவாஜி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடுப்பான எஸ்.ஏ.சி சிம்ரனை திட்டிவிட்டு பேக்கப் சொல்ல முடிவெடுத்தாராம்.
ஆனால், அவரை அழைத்த சிவாஜி ‘அவ மும்பையிலிருந்து வந்தவ. நான் யாருன்னு அந்த பொண்ணுக்கு தெரியாது. உனக்குதான் நான் சிவாஜி. அவளுக்கு இல்ல. சொல்லி புரிய வை. பேக்கப் பண்ண வேண்டாம்’ என சொல்லிவிட்டார். அதன்பின் சிவாஜி எவ்வளவு பெரிய நடிகர் என சிம்ரனுக்கு அங்கிருந்தவர்கள் எடுத்து சொல்ல தன் தவறை உணர்ந்த சிம்ரன் சிவாஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாராம். அதன்பின் சரியான நேரத்திற்கு வந்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
Rajinikanth: நடிகர்…
பல பேர்…
சிறுத்தை சிவா…
ரஜினி சிவாஜி…
Sun serials:…