ஒன்னு ரெண்டு இல்ல.. விஜயுடன் பல முறை சேர்ந்து டூயட் ஆடிய நடிகைகளின் லிஸ்ட்.. ஐயோ சிம்ரன் நீங்கதான் பெஸ்ட்

Published on: June 22, 2024
meena
---Advertisement---

Vijay Simran: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் . இன்று அவருடைய ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதனால் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை ஆங்காங்கே கோலாகலமாக கொண்டாடிக் கொண்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் அவருடைய அடுத்த கட்ட பயணமாக அரசியலும் இருப்பதால் இந்த பிறந்தநாள் அவரது வாழ்வில் ஒரு சிறப்பான பிறந்த நாளாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் உடன் நடித்த கதாநாயகிகள் பற்றிய ஒரு தகவலை தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். அவருடன் நடித்த நடிகைகளை பொறுத்த வரைக்கும் விஜய் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தால் போதும் அந்த நடிகைகளும் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தைப் பெற்ற நடிகைகளாகவே பார்க்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: இறந்தவருக்கு போன் போட்ட கமல்!.. உடல் நடுங்கி பதட்டமான உலக நாயகன்!.. இது அவர் லிஸ்ட்லயே இல்லயே!..

அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை விஜயுடன் பயணித்த நடிகைகள் யார் யார்? அவர்கள் எத்தனை முறை விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம் .விஜயன் இரண்டாவது படமான செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் ஜோடி சேர்ந்தவர் யுவராணி. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. அதன் பிறகு பல வருடங்கள் கழித்து சுறா படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யுவராணி.

அவருக்கு அடுத்தபடியாக விஜய்யுடன் நெருக்கமாக பேசப்பட்ட நடிகை சங்கவி. ரசிகன் படத்தின் மூலம் ஜோடியாக சேர்ந்த சங்கவி விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் மீண்டும் ஜோடியாக நடித்தார். விஜய் ரசிகர்களுக்கு எப்போதுமே சங்கவி மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு அடுத்தபடியாக சுவாதி விஜய்யுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்.

இதையும் படிங்க: நாடகத்தில் நடிக்கும்போது அடி தாங்க முடியாமல் அழுத எம்ஜிஆர்… இப்படி எல்லாமா நடந்தது?

அதில் தேவா, வசந்தவாசல், செல்வா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியை அடையவில்லை. அதன் பிறகு 90 கள் காலகட்டத்தில் விஜயின் ஆஸ்தான ஜோடியாக வலம் வந்தவர் சிம்ரன். ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் முதன்முதலாக ஜோடி சேர்ந்த சிம்ரன் அதன் பிறகு துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே போன்ற இரு சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் விஜய்னாலே சிம்ரன் என்ற அளவுக்கு இந்த ஜோடி பெரிய அளவில் பேசப்பட்டது.

அதிலும் யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி நானடா என்ற பாடலுக்கு இருவரும் சேர்ந்து ஆடிய நடனம் இன்றுவரை ரசிகர்களுக்கு ஒரு பிடித்தமான பாடலாகவே பார்க்கப்படுகிறது. அடுத்ததாக தமிழில் ஐந்து படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்த ஷாலினி விஜய் உடன் சேர்ந்து காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற இரு படங்களில் நடித்தார் .இதில் காதலுக்கு மரியாதை மட்டும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அடுத்ததாக ரம்பா மூன்று படங்களில் விஜய் உடன் சேர்ந்து நடித்தார். அதில் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல் ,மின்சார கண்ணா போன்ற படங்களை சொல்லலாம். அடுத்ததாக ஜோதிகா விஜயுடன் சேர்ந்து இரு படங்களில் மட்டுமே ஜோடியாக நடித்தார். திருமலை மற்றும் குஷி .அடுத்ததாக த்ரிஷா.

இதையும் படிங்க: இப்பனு இல்ல.. அப்போதிருந்தே இப்படித்தான் போல! டி.எம்.எஸுக்கே ஆட்டம் காட்டிய இசைஞானி

விஜய்யுடன் சேர்ந்து கில்லி படத்தில் ஜோடி சேர்ந்த த்ரிஷா அந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்த படங்களில் மீண்டும் ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் அமைந்தன. சமீபத்தில் லியோ படத்தில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அடுத்ததாக அசின். அசினை விஜயின் ஒரு லக்கியான நடிகையாகவே சொல்லலாம்.

விஜயுடன் நடித்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. அதில் சிவகாசி ,போக்கிரி, காவலன் போன்ற மூன்று படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. அசினைப் போல காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகளும் விஜயுடன் சேர்ந்து மூன்று படங்களில் மட்டுமே நடித்திருந்தனர். அந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றி அடைந்தது. இதில் சிம்ரன் மட்டுமே விஜயுடன் சேர்ந்து 5 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.