
Cinema History
16 வயது மாணவன்!.. சிம்ரன் நடித்த படம்… அதோட மார்க்கெட் காலி!..
வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சிம்ரன். 1995 முதலே ஹிந்தியில் படங்களில் நடித்து வந்தார் சிம்ரன். ஆனால் பாலிவுட்டில் எப்போதும் கதாநாயகிகளுக்கு பெரும் போட்டி இருந்தது.
இதனால் தமிழில் வாய்ப்பை பெற்று 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ் மோர் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சிம்ரன். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

Simran
அபோது பிரபலமாக இருந்த அஜித், சரத்குமார்,விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார் சிம்ரன். முக்கியமாக கவர்ச்சிக்காக பெரிதாக வரவேற்பை பெற்றார் சிம்ரன். பேட்ட திரைப்படம் வரையிலும் தன்னுடைய உடல் அழகை அப்படியே மேம்படுத்தி வருகிறார் சிம்ரன்.
சிம்ரன் நடித்த திரைப்படம்:
புது நடிகைகள் வர துவங்கியதும் பட வாய்ப்புகளை இழக்க துவங்கினார் சிம்ரன். 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கோவில்ப்பட்டி வீரலெட்சுமி பெரும் தோல்வியை கண்டது. அதற்கு பிறகு சிம்ரன் நடித்த திரைப்படம் கிச்சா வயது 16. இந்த திரைப்படத்தில் பாய்ஸ் திரைப்படத்தில் இருக்கும் நடிகர் மணிக்கண்டன் பள்ளி மாணவனாக நடித்திருப்பார்.

kicha vayathu 16
அவர் காதலிக்கும் ஆசிரியையாக சிம்ரன் நடித்திருப்பார். அப்போது நடித்த படங்கள் அவருக்கு அதிக தோல்வியை கொடுத்ததால் அவர் இந்த படத்திலும் விரக்தியோடே நடித்தார். இதனால் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராமல் இழுத்தடித்தார் சிம்ரன்.
எப்போடியோ ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு வெளியான இந்த திரைப்படம் படு தோல்வியை கண்டது. மேலும் இந்த படத்தில் அதிகமான கவர்ச்சி காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு பிரபலமான நடிகை இப்படியான படத்தில் நடிக்கலாமா? என்கிற கேள்வி அப்போது மக்கள் மத்தியில் எழுந்தது. வரிசையாக தோல்வியை கண்டதால் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார் சிம்ரன். அதற்கு கோவில்ப்பட்டி வீரலெட்சுமி மற்றும் கிச்சா வயது 16 ஆகிய இரண்டு படங்களும் முக்கிய காரணமாக இருந்தன.