சிம்ரன் நடிக்க மறுத்த நடிகர் யாருனு தெரியுமா?.. ஏம்மா நல்ல மனுஷன்!..
தென்னிந்திய சினிமாவிலேயே 90களில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன். 1997 ஆம் ஆண்டு அறிமுகமான சிம்ரன் 200 ஆம் ஆண்டிற்கு பிறகு வருடத்திற்கு 8 படங்கள் என மிகவும் பிஸியான நடிகையாகமாறிவிட்டார். அந்த சமயத்தில் விஜய் ,அஜித், பிரசாந்த் போன்றவர்களின் மானசீக கதாநாயகியாக வலம் வந்தார்.
நடிப்பு , நளினம், நடனம் என அத்தனை சிறப்பம்சம் கொண்ட நடிகையாக வலம் வந்த சிம்ரன் வட மாநிலத்தில் இருந்து வந்தாலும் தமிழ் மக்கள் கொண்டாடும் நடிகையாக மாறினார். ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் விருப்பமான நடிகையாகவே இருந்தார் சிம்ரன்.
கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடனும் சேர்ந்து பல படங்களில் நடித்தார். ஏகப்பட்ட விருதுகள், பெருமைகளுக்கு சொந்தக்காரராக விளங்கினார். சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்கெனவே இருந்தது.
ஆனால் அது நடக்காமல் போனது. சில ஆண்டுகள் கழித்து அந்த ஆசையும் நிறைவேறியது. பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே ரஜினி படத்தில் நடிக்க சிம்ரனுக்கு வாய்ப்பு வந்ததாம். சந்திரமுகி படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக முதலில் இவரைத் தான் அணுகினார்களாம்.
ஆனால் ரஜினி படத்தில் ரஜினிக்கு ஜோடியாகத்தான் நடிப்பேன், பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டாராம். அதன் பிறகே அந்த வாய்ப்பு ஜோதிகாவிற்கு சென்றிருக்கிறது. அது எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும்.
அதுமட்டுமில்லாமல் ஜோதிகாவின் அபார நடிப்பை அந்தப் படத்தில் தான் நாம் பார்த்திருக்கிறோம். ரஜினிக்காக
ஒரு மாஸ் ஹிட் படத்தையே தவறவிட்ட சிம்ரனை என்ன சொல்வது.
இதையும் படிங்க : திகிலூட்டும் விஜயின் மறுபக்கம்!.. அண்ணனின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த தம்பி..