Good Bad Ugly: 25 வருடத்திற்கு பிறகு … குட் பேட் அக்லி பார்த்து முதன் முறையாக மனம் திறந்த சிம்ரன்

ajith_simran
Good Bad Ugly: அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டி வருகிறது குட் பேட் அக்லி திரைப்படம். ஒரு ஃபேன் பாய் மூமெண்டாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். பிரேமுக்கு பிரேம் அஜித்தை எந்தளவு ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் ஆதிக். அடிப்படையில் அவரும் ஒரு தீவிர அஜித் வெறியன் என்பதால் இந்தப் படம் பெரிய ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக மாறியிருக்கிறது.
விடாமுயற்சி படத்தால் ரசிகர்கள் எந்தளவு வேதனை அடைந்தார்களோ அதை எல்லாம் இந்தப் படம் சரி செய்துவிட்டது. கத்தி கத்தி தொண்டையே வலித்துவிட்டது என்றுதான் பலரும் கூறினார்கள். அந்தளவுக்கு படத்தில் நிறைய விஷயங்களை செய்திருக்கிறார் ஆதிக். அதில் விண்டேஜ் பாடலும் தூள் கிளப்பியிருக்கிறது. அதோடு ஜிவி பிரகாஷ் இசையும் பட்டையை கிளப்பியிருக்கிறது.
டமால் டுமீல் என்றுதான் படமுழுக்க சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது. இப்படித்தான் அஜித் படம் இருக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் விரும்பினர். அது இந்த படத்திற்கு சரியாக அமைந்திருக்கிறது. படத்தில் நிறைய ரிஃபரன்ஸ் இருந்தாலும் எதுவும் போரடிக்காத வகையில் ரசிக்கும் படியாக இருந்தது. அஜித் திரிஷா ஆறாவது முறையாக இணைந்தாலும் இன்னொரு நாயகி சிம்ரன் வரவு படத்திற்கு கூடுதல் ஹைப்பை ஏற்படுத்தியது.
அதுவும் அஜித் சிம்ரன் வரும் போது பின்னணியில் ஒலித்த வாலி பட இசை அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தை சமீபத்தில்தான் லண்டனில் சிம்ரன் பார்த்து ரசித்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் சிம்ரன். அதாவது வாலி பட சீன் வரும் போது அனைவரும் ரசித்ததை பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது..
வாலி படம் ரிலீஸான போது இருந்த ரசிகர்கள் இப்போது குடும்பமாக வந்திருப்பார்கள். அதனால் 25 வருடத்திற்கு பிறகு ஃபேமிலி ஆடியன்ஸாக இந்தப் படத்தை ரசிக்கிறார்கள் என்றால் அதுதான் வெற்றி. ஆதிக் சூப்பரான இயக்குனர். அவருக்கு ஒரு பிரகாஷமான வாழ்க்கை இருக்கிறது என சிம்ரன் கூறினார்.