திரையுலகில் அந்த மாதிரியான ஆடைகள் அணிய கட்டாயப்படுத்துவாங்க.... 90'ஸ் ஃபேவரைட் நடிகை ஓப்பன் டாக்....!

by ராம் சுதன் |   ( Updated:2022-05-24 07:52:46  )
simran
X

சினிமாவில் பல நடிகைகள் கவர்ச்சியாக நடிக்க காரணம் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதுதான். சினிமாவில் நுழைந்து விட்டாலே கவர்ச்சி காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் என பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

அந்த நடிகை வேறு யாருமல்ல 90களில் இளைஞர்கள் பலரது கனவு கன்னியாக வலம் வந்த ஒல்லி இடுப்பழகி நடிகை சிம்ரன் தான். தற்போதும் குணச்சித்திர வேடங்களில் அசத்தி வரும் நடிகை சிம்ரன் துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியான சமயத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

simran

அந்த பேட்டியில் ஆரம்ப நாட்களில் தான் கிளாமராக நடித்தது குறித்து சிம்ரன் ஓப்பனாக கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, "கிளாமர் என்பது நடிக்க வந்த முதல் இரண்டு வருடங்களில் ஓகே. ஆனால் சினிமாவில் நிலைத்து நிற்க திறமையான நடிப்பு தானே முக்கியம்.

நான் எப்போதும் கிளாமரை விட வேண்டும் என்று நினைத்தது இல்லை. கிளாமர் என்பது அதீத கவர்ச்சி அல்ல. நீங்கள் உங்கள் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டும். அதீத கவர்ச்சி வல்கராக இருக்கும்.

simran

நான் நடிக்க வந்த சமயத்தில் கிளாமராக உடை அணிந்திருக்கிறேன். ஏனெனில் சினிமா துறையினர் உங்களை அந்த மாதிரியான ஆடைகள் அணிய கட்டாயப்படுத்துவாங்க. ரசிகர்களும் அதைத்தான் விரும்புவாங்க. நான் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் நிறைய கஷ்டப்பட்டேன். அதை என்னால் மறக்கவே முடியாது" என கூறியுள்ளார்.

Next Story