கவர்ச்சி மட்டுமல்ல.. பெர்பார்மன்ஸிலும் கலக்கிய சிம்ரன்.. என்னென்ன படங்கள் தெரியுமா?

by Rohini |   ( Updated:2025-04-24 04:08:11  )
simran (1)
X

simran (1)

Simran: 90களில் கனவு கனியாக இந்த தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர் நடிகை சிம்ரன். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பழமொழிகளில் கலக்கிய சிம்ரன் இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அவருடைய நடிப்பில் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி .இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சிம்ரன். இதனுடைய ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் ஹிந்தி தெலுங்கு என நடித்து வந்த சிம்ரன் தமிழில் ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கும் போதே ஒரு கவர்ச்சி புயலாக தான் நுழைந்தார். அதிலிருந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஆழமாக பதிந்தார் சிம்ரன். தொடர்ந்து அவர் நடித்த அத்தனை படங்களிலும் குட்டை பாவாடை அணிந்து தன்னுடைய கவர்ச்சியை காட்டி நடித்தார் சிம்ரன். இருந்தாலும் அவருடைய கவர்ச்சியையும் தாண்டி அவருடைய நடனம் நடிப்பு என மக்களை வெகுவாக கவர்ந்தது. இடை அழகி என்ற பட்டத்திற்கும் சொந்தமானார் சிம்ரன். இன்றுவரை அவருடைய நடனத்திற்கு ஈடு கொடுக்கக்கூடிய நடிகை யாருமில்லை என்று தான் சொல்ல வேண்டும் .

அந்த வகையில் கவர்ச்சியையும் தாண்டி பெர்பார்மன்சில் சிம்ரன் கலக்கிய திரைப்படங்கள் என்னென்ன என்பதை தான் இதில் நாம் பார்க்க போகிறோம். அதில் அவள் வருவாளா திரைப்படம். அஜித் சிம்ரன் நடிப்பில் வெளியான இந்த படத்தில் அஜித்தையும் தாண்டி சிம்ரனின் பெர்பார்மன்ஸ் தான் மக்களை வெகுவாக கவர்ந்தது. சாதுவான ஒரு கேரக்டரில் படம் முழுக்க கவர்ச்சியை காட்டாமல் தன்னுடைய நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி ரசிகர்களிடம் அதிக ஸ்கோர் வாங்கிய திரைப்படம் தான் அவள் வருவாளா.

அதன் பிறகு பிரியமானவளே திரைப்படம். இந்த படத்தில் கிளைமாக்ஸில் விஜய்க்கும் சிம்ரனுக்கும் இடையே நடக்கும் அந்த வாக்குவாதம் .அதில் சிம்ரனின் நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கோபத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் ஆணித்தரமாக பதிந்தது என்றே சொல்லலாம் .அந்தப் படத்தில் அவர் கவர்ச்சியை காட்டாமல் நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி இருந்தார் சிம்ரன். இந்த படமும் சிம்ரனின் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்த ஒரு திரைப்படம் தான். அடுத்ததாக கன்னத்தில் முத்தமிட்டால். இந்த படத்தில் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார் சிம்ரன்.

தாயுக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் ஒரு பாசப் போராட்டத்தின் கதைதான் கன்னத்தில் முத்தமிட்டால். இதில் ஒரு தாயாக அனைத்து குழந்தைகளின் மனதில் இடம் பிடித்தார் சிம்ரன் என்று தான் சொல்ல வேண்டும். இதிலும் அவருடைய நடிப்பு பலரையும் பாராட்ட வைத்தது. இதுவும் அவருடைய கேரியரில் டாப்பில் இருக்கும் ஒரு படமாக அமைந்தது. அடுத்ததாக மீண்டும் விஜயுடன் துள்ளாத மனமும் துள்ளும் என்ற படத்தில் நடித்தார். இதில் கடைசியில் கலெக்டராக அவர் நடித்த கேரக்டர் தன்னுடைய குட்டியை அவர் தேடும் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களை கண்கலங்க வைத்தது என்று சொல்லலாம்.

இதிலும் அவர் எந்த ஒரு கவர்ச்சியையும் காட்டவில்லை .பட முழுக்க பெர்பார்மன்ஸ் மட்டுமே வெளிப்படுத்தி இருந்தார். அந்த வகையில் கடைசியாக டூரிஸ்ட் ஃபேமிலி படமும் இந்த லிஸ்டில் இணைந்து இருக்கிறது. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இந்த படத்தில் நடித்திருக்கிறார் .ஒரு சாதாரண குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் என்னென்ன மாதிரியான கஷ்டங்களை எதிர்கொள்கிறாள். அதை எப்படி சமாளிக்கிறாள் என்பது மாதிரியான கதாபாத்திரமாகத்தான் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சிம்ரனின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அவருடைய ஹிட் லிஸ்டில் இந்த படமும் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story