கேமியோவாத்தான் வந்தேன்!.. தியேட்டரையே பிளாஸ்ட் பண்ணிட்டீங்களே!.. சிம்ரன் சொன்னதை கேட்டீங்களா!..

by Saranya M |
கேமியோவாத்தான் வந்தேன்!.. தியேட்டரையே பிளாஸ்ட் பண்ணிட்டீங்களே!.. சிம்ரன் சொன்னதை கேட்டீங்களா!..
X

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரையரங்குகளை பிஸியாக வைத்து வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், பிரியா வாரியர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த த்ரிஷாவையே கேமியோ ரோலில் வந்து ஓவர் டேக் செய்த சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு தற்போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை சிம்ரன் தமிழில் ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து நட்புக்காக, ரமணா, பஞ்சதந்திரம், நியூ, வாரணம் ஆயிரம், உதயா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சிம்ரன் அஜித் குமாருடன் இணைந்து உன்னை கொடு என்னை தருவேன், வாலி, அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் பல ஆண்டுகளுக்கு பிறகு குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு திரையரங்குகளில் செம தியேட்டர் மொமண்ட்டாக மாறியுள்ளது.

குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் அந்த ஒரு விசில் சீனிலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார். சிம்ரன் வரும் காட்சிகளுக்கு தியேட்டரில் க்ளாப்ஸ் பறக்கிறது. மேலும், படத்தில் கதாநாயகியாக நடித்த த்ரிஷாவை டம்மி ஆக்கிவிட்டனர் சிம்ரனும் பிரியா வாரியரும் என ரசிகர்கள் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.

நடிகை சிம்ரன் குட் பேட் அக்லி படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பிற்காக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் ”அதில் நான் கேமியோவாக வந்தேன் அனைவரின் அன்புடன் வெளியேறுகிறேன், மீண்டும் அஜித் அவர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி, இந்த குட் பேட் அக்லி படம் நல்ல பயணமாக அமைந்ததில் படக் குழுவிற்கும் தியேட்டரில் பிளாஸ்ட்டாக படத்தை கொண்டாடும் ரசிகர்களுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

நடிகை சிம்ரன் குட் பேட் அக்லி படத்தில் கில் பில் படத்தில் உமா தர்மன் அணிந்து நடித்த மஞ்சள் நிற உடையை அணிந்துக் கொண்டு வந்ததும் ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் ஆகிவிட்டனர்.

Next Story