என்றும் இளமை குறையாத 90's ன் பெண் ஜாம்பவான்..! ரசிகர்கள் குஷி...
90's களின் மனதை பெரிதும் கொள்ளையடித்தவர் சிம்ரன். அப்ப உள்ள லேடி சூப்பர் ஸ்டார் யார் என்றால் நம்ம சிம்ரன் மட்டும் தான். அந்த கால கட்டத்தில் அவருக்கு போட்டி யாரும் இல்லை. அந்த அளவுக்கு தனது நடிப்பாலும் தனது நடனத்திறமையாலும் ஒட்டு மொத்த திரையுலகையும் தன் வசப் படுத்தியிருந்தார்.
இவர் நடித்த ஒன்ஸ்மோர், வாலி, பிரியமானவளே, அவள் வருவாளா, துள்ளாத மனமும் துள்ளும்,நேருக்குநேர், உன்னைகொடு என்னைத் தருவேன் போன்ற படங்கள் விஜய் மற்றும் அஜித் உடன் நடித்த படங்கள். அதிகமாக இவர்களுடன் தான் அதிகமான படங்கள் நடித்துள்ளார்.
மேலும் திரையுலகில் அனைத்து நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகை சிம்ரன் மட்டும் தான். இவர் ஏகப்பட்ட விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் பேட்ட படத்தில் ரீ என்ரி கொடுத்தார்.
அண்மையில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படத்திலும் நடித்து தனது திறமையை காட்டியுள்ளார். மகான் படப்பிடிப்பில் எடுத்த சிம்ரனின் சில போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.