Connect with us

அன்றே கணித்தார் சூர்யா!.. போதை மருந்து கடத்திய ‘சிங்கம் 2’ பட நடிகர் கைது…..

singam2

Cinema News

அன்றே கணித்தார் சூர்யா!.. போதை மருந்து கடத்திய ‘சிங்கம் 2’ பட நடிகர் கைது…..

actor-2

சினிமாவில் கற்பனையாக காட்டப்படும் விஷயங்கள் அல்லது பேசப்படும் விஷயங்கள் சில சமயம் நிஜ வாழ்விலும் அப்படியே நடப்பதுண்டு. அப்படி நடக்கும் போது அன்றே கணித்தார் என நெட்டிசன்கள் கிண்டலடிப்பதுண்டு.

இதில் அதிகம் சிக்கியவர் நடிகர் சூர்யாதான். சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளை அவரின் படங்களில் இடம் பெற்ற காட்சிகளுடன் ஒப்பிட்டு ‘அன்றே கணித்தார் சூர்யா’ என டிவிட்டர் மற்றும் முகநூலில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர். தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு காரியம் நடந்துள்ளது.

actor-2

சிங்கம் 2 படத்தில் போதை மருந்து கடத்தும் நபராக நடித்தவர் டேனி சேபனி. இவர் நைஜீரியாவை சேர்ந்தவர். இவர் சர்வதேச போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவனாக அப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பார்.

இதையும் படிங்க: சந்திக்க விரும்பிய முதல்வர்… எஸ்கேப் ஆகி ஓடிவந்த விஜய்.. பின்னணி என்ன?….

ஒரு காட்சியில் அவரை பிடித்து சிறையில் அடைப்பார் சூர்யா. ஆனால், அவரின் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தி அவரை காப்பாற்றி அழைத்து சென்றுவிடுவார்கள். இவரை பிடிக்க திட்டம் வகுத்து சூர்யா எப்படி அதை சாதித்தார் என்பதே அப்படத்தின் கதையாகும். சூர்யா அவரை கைது செய்யும் காட்சியில் அவரின் அருகில் நிற்கும் நடிகராக நடித்தவர் காக்விம்.

இந்நிலையில், உண்மையிலேயே போதை மருந்து கடத்தலில் காக்விம் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடந்து ‘அன்றே கணித்தார் சூர்யா’ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top