சிங்க நடை போட்ட சிங்கம்புலியின் நகைச்சுவை படங்கள்
நடிகர், வசனகர்த்தா, இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர் சிங்கம்புலி. 2002ல் ராம் சத்யா என்ற பெயரில் அஜீத்குமாரின் ரெட் படத்தை இயக்கினார். 2005ல் சூர்யா, ஜோதிகா நடிப்பில் மாயாவி என்ற படத்தை இயக்கினார். நகைச்சுவையில் மன்னன் தான் இவர். அப்பாவித்தனம் கலந்த இவரது குரலில் இவர் பேசும்போது அந்த காமெடி நம்மை சிரிக்க வைத்து விடும்.
இயக்குனர் பாலாவின் பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதேபோல் பிதாமகன் படத்திற்கும், ரேணிகுண்டா படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். நடிகராக பல ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர். இவர் நடிப்பில் சில படங்களைப் பார்ப்போம்.
நான் கடவுள்
2009ல் பாலா இயக்கத்தில் வெளியான படம் நான் கடவுள். ஆர்யா, பூஜா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் படம் பட்டையைக் கிளப்பியது. இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி நடித்துள்ளார். இந்தப்படத்தில் சிங்கம்புலி பிச்சைக்காரனாக நடித்திருப்பார். பலமான திரைக்கதை அமைந்திருந்ததால் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
முத்துக்கு முத்தாக
2011ல் ராசு மதுரவன் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய படம். இளவரசு, சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ், விக்ராந்த், நடராஜ், ஓவியா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகராக சிங்கம்புலி நடித்துள்ளார். கவி பெரிய தம்பி இசை அமைத்துள்ளார். என்ன பண்ணி தொலைச்ச, என்னன்ரா நேரம் என்னன்ரா, காத்தடிச்சா உள்பட பல பாடல்கள் உள்ளன.
மனம் கொத்திப் பறவை
2012ல் எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மனம் கொத்திப் பறவை. டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஆத்மியா, இளவரசு, சிங்கம்புலி, சூரி, ஸ்ரீநாத், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இவர்களுள் சிங்கம்புலி மோடுமுட்டி என்ற கேரக்டரில் வந்து கலக்கியிருப்பார். படம் முழுவதும் இவரது காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். ஜல் ஜல் ஜல் ஓசை, பூ பூ பூ, டங் டங் உள்பட பல பாடல்கள் உள்ளன.
கடல்
2013ல் மணிரத்னம் இயக்கி வெளியான படம். கௌதம் கார்த்திக், துளசி நாயர், அர்ஜூன், அரவிந்த்சாமி, தம்பிராமையா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். சித்திரை நிலா, அடியே, மூங்கில் தோட்டம் உள்பட பல பாடல்கள் உள்ளன.
நய்யாண்டி
2013ல் வெளியான இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். சற்குணம் இயக்கியுள்ளார். தனுஷ், நஸ்ரியா, வம்சி கிருஷ்ணா, சூரி, சிங்கம்புலி, பிரமிட் நடராஜன், சத்யன், ஸ்ரீமன், மீரா கிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ லே லே எட்டி பார்த்தாளே. இனிக்க இனிக்க, மேரேஜ் மார்க்கட்டில் உள்பட பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.