சக்சஸ வேற கொண்டாடிட்டோம்! என்ன பண்றது இப்போ? புது சர்ச்சையில் சிக்கிய ‘சிங்கப்பூர் சலூன்’
Singapore Saloon: கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கப்பூர் சலூன். மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு பிறகு பாலாஜி ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். வீட்ல விஷேசம் திரைப்படமும் நகைச்சுவை மிக்க திரைப்படமாக அமைந்தது.
காஷ்மோரா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை இயக்கிய கோகுல்தான் இந்த படத்தையும் இயக்கினார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஜெமினி, சாவித்திரியின் தீவிரக் காதலுக்கு இவ்வளவு தடைகளா? ஆனா தடை போட வேண்டியவர் போடலையே..!
சமீபத்தில்தான் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் சக்சஸ் மீட்டும் நடைபெற்றது. அந்த சக்சஸ் மீட்டை விமர்சித்து பல பேர் விமர்சித்தும் இருந்தார்கள். அதாவது 23 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சிங்கப்பூர் சலூன் திரைப்படம் மொத்தமாகவே 7 கோடிதான் வசூல் பெற்றதான்.
இதில் எங்கு இருந்து சக்சஸ் ஆனாங்க? என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் இந்தப் படத்தை பற்றி மற்றுமொரு விமர்சனம் எழுந்திருக்கிறது. அதாவது ‘பேதம் கொல்’ என்ற ஒரு குறும்படத்தின் ஜெராக்ஸ் சிங்கப்பூர் சலூன் என்று கூறிவருகிறார்கள். அதனால் பேதம் கொல் குறும்படத்தின் இயக்குனரான ஜெகனுக்கு ஏதாவது கிரெடிட்ஸ் கொடுத்திருப்பார்களா என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஏங்க அதுக்குனு இப்படியா போடுவீங்க… நான் சாகலைங்க.. ஷாக் கொடுத்த பூனம் பாண்டே!…
இதற்கு பதில் கூறிய பிரபல சினிமா இயக்குனர் சித்ரா லட்சுமணன் ‘பேதம் கொல் என்ற குறும்படத்தை போன்றே சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் அமைந்திருக்கிறது என்ற செய்தி இப்போதுதான் மெல்ல மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றது. அதனால் இந்த குறும்படத்தின் கதாசிரியருக்கோ இயக்குனருக்கோ எந்த ஒரு கிரடிட்ஸும் கொடுத்திருக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன் ’ என சித்ரா லட்சுமணன் கூறினார்.