ராஜ பார்வை முதல் மும்பை எக்ஸ்பிரஸ் வரை!.. மறக்க முடியாத சிங்கீதம் சீனிவாச ராவ்!…
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பல முக்கிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ். 95 வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு மரணமடைந்தார்.தமிழ் சினிமாவை பொறுத்தவரை சங்கீதம் சீனிவாச ராவ் கமலை வைத்து இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக அமைந்தன.. கமலை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படம் ராஜபார்வை. இந்த திரைப்படம் 1981ம் வருடம் ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன் கண் பார்வையற்றவராகவும், […]

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பல முக்கிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ். 95 வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சங்கீதம் சீனிவாச ராவ் கமலை வைத்து இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக அமைந்தன..
கமலை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படம் ராஜபார்வை. இந்த திரைப்படம் 1981ம் வருடம் ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த படத்தில் கமல்ஹாசன் கண் பார்வையற்றவராகவும், அவருக்கு ஜோடியாக மாதவியும் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘அந்தி மழை பொழிகிறது’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன்பின் மீண்டும் அவர் கமலை வைத்து இயக்கிய திரைப்படம் ‘பேசும் படம்’. 1987ம் வருடம் செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார். முழு படமும் எந்த வசனமும் இல்லாமல் படம் பிடிக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க முகபாவனை காட்டி மட்டுமே இந்த படத்தில் கமல் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின் ஒரு வசனம் கூட இல்லாமல் ஒரு படம் தற்போது வரை வெளியாகவில்லை..
அதேபோல் கமலை வைத்து சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் 1989ம் வருடம் ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த படத்தில் அப்பா, இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் கமல் நடித்திருந்தார். கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார். இந்த படத்திற்கும் இளையராஜாவே இசையமைத்திருந்தார். இது ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அடுத்து கமலை வைத்து சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம். 1990ம் வருடம் வெளியாகி கமலுக்கும், சிங்கீதம் சீனிவாசராவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் முக்கிய படமாக அமைந்தது. மொத்தம் 4 வேடங்களில் கமல் நடித்திருந்தார்.
அதேபோல் கமலை வைத்து காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களையும் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் திக்கற்ற பார்வதி, இரு நிலவுகள், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், லிட்டில் ஜான் ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கமல், சிங்கீதம் சீனிவாச ராவ், இளையராஜா மற்றும் திரையுலகில் பல இயக்குனர்களும் கலந்து கொண்டு அவர் இயக்கிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பற்றி அவர்கள் கலந்துரையாடிய நிகழ்ச்சி வீடியோவாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
கடைசியாக சிங் கீதம் என்கிற திரைப்படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் வசனம் இல்லாமல் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பாடல்களை பாடுவது போல காட்சிகளை அமைத்திருந்தார். இந்த படம் கடந்த ஜூன் 12ம் தேதி வெளியானது. வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிங்கீதம் சீனிவாசராவ் நேற்று இரவு காலமானார்.




