
Cinema News
40 வயசுல குழந்தை பெத்துக்க போறீங்களா.?! நயன்தாரா பற்றிய டாக்டரின் ‘ச்சீ’ கமெண்ட்.. ஆதாரத்தை காட்டிய சின்மயி.!
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக தற்போது பல்வேறு குரல்கள் எழுந்து வருகிறது. அதற்கு சில வருடங்களுக்கு முன்னரே முன்னெடுத்தவர் பாடகி சின்மயி.
அதுவும், ME TOO எனும் உலகளாவிய பாலியல் தொந்தரவுக்கு எதிரான ஒரு குரலின் கீழ் பாடலாசிரியர் வைரமுத்து மீதே இவர் குற்றம் சாட்டினார். அது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவர் தற்போது தனது டிவிட்டர் இணையதள பக்கத்தில் ஒரு மருத்துவரின் கமெண்ட் குறித்து புகைப்படம் ஒன்றை ஆதாரமாக பதிவிட்டுள்ளார். அதாவது, அவரும் அவருக்கு நெருக்கமான சில மருத்துவர்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிக்கொண்டிருந்த போது,
ஒரு பெண்ணின் திருமணம் பற்றி பேச்சு ஆரம்பிதோம். அப்போது அந்த ஒரு ஆண் மருத்துவர், ‘ அந்த பெண்ணிற்கு தற்போது வயது 40ஐ நெருங்க போகிறது. கிட்டத்தட்ட பாட்டி வயசு. இந்த வயசில் திருமணம் செய்து குழந்தை பெற்றெடுக்க போகிறாராம். பரவாயில்லை. அதான் நிறைய மருத்துவ வசதிகள் அவருக்காக இருக்கிறதே ‘ என்பது போல கமெண்ட் செய்து விட்டார்.
இதையும் படியுங்களேன் – நயன்தாரா செஞ்சது சரி.!? பத்திரிக்கையாளர்கள் வராதது ரெம்ப நல்லதா போச்சு.! ஷாக்கிங் ரிப்போர்ட் இதோ…
இதனை தான் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, பாடகி சின்மயி , இப்படி மோசமாக இந்த மருத்துவர் கமெண்ட் செய்துள்ளார் ஏன பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர், அவர்கள் கமெண்ட் அடித்த அந்த பெண்மணி நயன்தாரா தான். அவருக்கு தான் வயது 37 ஆகிறது. தற்போது திருமணம் ஆகியுள்ளது. நயன்தாராவைதான் மறைமுகமாக அந்த ஆண் மருத்துவர் சாடியுள்ளார் என கூறிவருகின்றனர்.
We happened to be speaking about sexism in Medical colleges and the gender bias female doctors, surgeons face on my Instagram page and I got this sent this.
A female actor gets married and this amazing doctor immediately leaves this crappy comment. pic.twitter.com/A4rwGyCd30— Chinmayi Sripaada (@Chinmayi) June 12, 2022