இசையமைப்பாளர் எல்லாம் பாடுனா எப்படி வெளங்கும்?!.. அனிரூத்தை தாக்கி பேசிய பிரபல பாடகர்…
இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள் என பலரும் சேர்ந்ததே ஒரு சினிமாவாக பார்க்கப்படுகிறது. ஒரு திரைப்படம் எடுக்கப்படும் பொழுது அதில் நூற்றுக்கணக்கான நபர்கள் ஊழியர்களாக பணி புரிகின்றனர்.
அவர்கள் அனைவருமே ஒரு திரைப்படம் உருவாகுவதற்கு முக்கியமான காரணமாக இருக்கின்றனர். அதில் சிலருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் அது மொத்த சினிமாவையும் பாதிக்கும். தற்சமயம் பாடல் துறையில் சினிமாவில் பலரும் வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்பெல்லாம் சினிமாவில் பாடலாசிரியர்கள்தான் பாடலுக்கான வரிகளை எழுதுவார்கள் பிறகு அதை பாடகர்கள் பாடுவார்கள். எனவே கண்ணதாசன் வைரமுத்து போன்ற பெரிய பாடல் ஆசிரியர்களும் ஏகப்பட்ட பாடகர்களும் தமிழ் சினிமாவில் இருந்தார்கள்.
ஆனால் இப்பொழுதெல்லாம் இசையமைப்பாளர்கள் நடிகர்கள் போன்றவர்களை படத்திற்கான பாடல் வரிகள் எழுதுவது பாடல்களை பாடுவது போன்ற விஷயங்களை செய்கின்றனர்.
இந்த விஷயங்கள் பாடலாசிரியர்களையும் பாடல்களையும் வெகுவாக பாதிக்கிறது. பல இசையமைப்பாளர்களின் பாடல்களில் பாடியவர் பாடகர் தேவன் ஏகாம்பரம். இவர் இது குறித்து ஒரு பேட்டியில் கூறும்பொழுது தற்சமயம் ஒரு இசையமைப்பாளர் அவர் இசையமைக்கும் அனைத்து படங்களிலும் ஒரு பாடலாவது பாடி விடுகிறார்.
இப்படி இசையமைப்பாளர்களே பாடல்களை பாடினால் எப்படி நாங்கள் வாய்ப்புகளை பெற முடியும். இப்போது பாடகர்கள் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவது என்பதே குறைந்துவிட்டது எனக் கூறியிருந்தார். தற்சமயம் இசையமைப்பாளர் அனிருத்தான் அதிகமாக அவர் இசையமைக்கும் திரைப்படங்களில் பாடல்கள் பாடி வருகிறார். எனவே நேரடியாக அனிருத்தைதான் தாக்குகிறாரா தேவன் ஏகாம்பரம் என்கிற கேள்வி நெட்டிசன் மத்தியில் எழுந்துள்ளது.