More
Categories: Cinema History Cinema News latest news

காதலை சொல்ல முடியாமல் தவித்த பாடகி ஜானகி… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

80களில் தமிழ்த்திரை உலகில் பரபரப்பான பின்னணிப் பாடகியாக வலம் வந்தவர் எஸ்.ஜானகி. இவரது குரல் உடன் இசைஞானி இளையராஜாவின் இசையும் சேர்ந்து விட்டால் நம் மனது லேசாகி காற்றில் பறந்து விடும்.

80ஸ் குட்டீஸ்களைக் கேட்டுப்பாருங்கள். அந்தக் காலத்தில் வானொலி நிலையங்களில் இவரது திரையிசைப் பாடல்கள் ஒலிக்காத நாள்களே இல்லை எனலாம்.

Advertising
Advertising

இதையும் படிங்க… ரஜினியுடன் இணையும் சத்யராஜ்… மோடி வேடத்தில் நடிக்கப் போகிறாரா? அவரே சொன்ன ‘நச்’ பதில்

ஆந்திரா தான் இவரது பூர்வீகம். இசைக்கச்சேரிகளில் தான் முதலில் பாடினார். திரைத்துறைக்கு வந்ததும் இவருக்கு ஒரு சவாலான பாடல் கிடைத்தது. அதை அப்போது பிரபலமாக இருந்த பி.சுசீலாவே பாட முடியாது என்றாராம். ஆனால் எஸ்.ஜானகி அந்தப் பாடலை அசால்டாகப் பாடி அசத்தியுள்ளார். அது தான் கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெற்ற சிங்கார வேலனே தேவா… என்ற பாடல்.

இந்தப் பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இவர் இளையராஜா இசையில், எஸ்.பி.பி.யுடன் இணைந்து பாடிய அத்தனைப் பாடல்களும் நம்மை மெய்மறக்கச் செய்யும் ரகங்கள் என்றால் அது மிகையில்லை.

எஸ்.ஜானகி மேடைப்பாடகியாக இருந்த போது ராம்பிரசாத் என்பவர் அறிமுகமானாராம். இவர் வேறு யாருமல்ல. ஜானகி கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவரின் மகன் தானாம்.

ஜானகியின் திறமை வெறும் இசைக்கச்சேரியோடு முடிந்து விடக்கூடாது. திரைத்துறைக்கும் வர வேண்டும் என இவர் தனது அப்பாவிடம் அடிக்கடி கூறுவாராம். அவரது ஆலோசனைப்படி ஜானகியும் கேட்டாராம். அப்படித் தான் ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்தாராம்.

தனது திரை இசைப்பயணத்திற்குக் காரணமானவர் ராம்பிரசாத் என்றதால் அது நட்பாகவும், பின்னர் காதலாகவும் மாறியதாம். எத்தனையோ ஹீரோயின்களுடைய காதலைத் தனது இனிய குரலால் வெளிப்படுத்தியவர் ஜானகி. ஆனால் இவரோ தனது காதலைச் சொல்ல முடியாமல் தவித்துள்ளார்.

இதையும் படிங்க… முதல்வரான பின்னரும் தேடிப்போய் நடிகரின் காலில் விழுந்த எம்.ஜி.ஆர்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?!..

ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் இவரது காதல் எப்படியோ திருமணத்தில் முடிந்துவிட்டதாம். சினிமாவில் வாய்ப்பு தேடும்போதும், ரெக்கார்டிங் தியேட்டருக்குப் போகும்போதும் ஜானகி உடன் தான் ராம்பிரசாத் இருப்பாராம். அந்த வகையில் தன் வாழ்க்கை முழுவதையுமே அந்த இனிய குரலுக்காகத் தியாகம் செய்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவரது காதலும் ஒரு வகையில் தெய்வீகக் காதல் தான்.

Published by
sankaran v