Connect with us
ilai

Cinema News

என்னது இந்த ராகத்தில் பாடினால் மழை வருமா? ராஜாவை கேலி செய்த யேசுதாஸ்.. நடந்தது என்ன தெரியுமா?

Ilaiyaraja: இளையராஜாவுக்கு முன்பே எத்தனையோ இசை ஜாம்பவான்களை இந்த தமிழ் சினிமா கண்டிருக்கிறது. வீணை எஸ் பாலச்சந்தர், எஸ் எம் சுப்பையா நாயுடு, கே வி மகாதேவன், மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன்  -ராமமூர்த்தி, வேதா, ஜிகே வெங்கடேஷ் போன்ற பெரிய இசை ஆளுமைகள் இந்த தமிழ் சினிமாவை கட்டி ஆண்டு இருக்கின்றனர்.

இவர்களின் திறமையான இசையை சுவாசித்து வந்தவர் தான் இளையராஜா. இவர்களில் ஜிகே வெங்கடேஷிடம் உதவியாளராக தனது இசைப் பணியை தொடங்கிய இளையராஜா பல மேடைகளில் எம் எஸ் விஸ்வநாதனின் இசைதான் தன்னை மேலும் உருவாக்கியது என கூறி வந்திருக்கிறார் .எத்தனையோ படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் இனி வரும் திரைப்படங்களுக்கும் இசையமைக்கும் அளவுக்கு அவரிடம் அந்த இசை அமுதசுரபி போல சுரந்து கொண்டே தான் இருக்கின்றது.

இதையும் படிங்க: கண்ட இடத்துல கை!.. பிரேமலு ஹீரோயினை கசக்கி பிழிந்த சென்னை ரசிகர்கள்!.. மமிதா பைஜு வேதனை!..

நமது பாரம்பரியமான தெம்மாங்கு பாடல், கிராமிய கலைஞர்களின் பாடல் ,குத்து பாடல், தாலாட்டு பாடல், காதல் பாடல் என எல்லா விதமான இசைகளிலும் பல பாடல்களை தந்தவர் நம் இசைஞானி இளையராஜா. நேற்று அவருடைய எண்பதாவது பிறந்தநாளை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கின்றார். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் படத்தில் அமைந்த ஒரு பாடலின் ரகசியத்தை பற்றிய ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது .

அந்தப் படத்தில்  ‘தூங்காதே விழிகள் ரெண்டு’ என்ற ஒரு பாடல் அமைந்திருக்கும். அது இப்போது வரைக்கும் இளைஞர்களை தூங்கவிடாமல் செய்த பாடலாகும். கேட்க கேட்க நம் உள்ளம் உருக அமைந்த பாடலாகும். அந்தப் பாடலின் பாடல் பதிவு ஒரு கோடை பொழுதின் பிற்பகலில் நடந்து கொண்டிருந்ததாம் .அந்தப் பாடல் அமிர்தவர்ஷினி என்ற ராகத்தை அடிப்படையாகக் கொண்டதாம்.

இதையும் படிங்க: சூரிக்கு சுக்கிர திசை அடிச்சுடுச்சுடோய்!.. 3 நாளில் பாக்ஸ் ஆபிஸ் கோட்டையில் கொடிநாட்டிய கருடன்!..

அந்த ராகத்தில் முறையாக பாடினால் மழையையே வரவழைக்கலாமாம். அந்தப் பாடலின் ட்ராக்கை இளையராஜா பாடி முடித்ததும் அதை ஜேசுதாஸும் ஜானகியும் கேட்டிருக்கிறார்கள். கேட்ட உடனேயே இளையராஜாவிடம்  ‘அமிர்தவர்ஷினி ராகத்துல இருக்கு. மழை வரலன்னா எங்களை திட்டாதீங்க’ என்று கிண்டல் செய்தபடி சொன்னார்களாம்.

பாடல் பதிவும் முடிந்து விட்டதாம். ஸ்டுடியோவை விட்டு வெளியே வரும்போது எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியாம். யாரும் வீட்டுக்கு கிளம்ப முடியாத வகையில் கனத்த மழை அந்த மதியத்தில். யாருமே எதிர்பார்க்காத மே மாதத்தில் ஒரு நாளில் அவ்வளவு ஒரு பெரிய மழையை யாரும் எதிர்பார்க்கவில்லையாம். இந்த செய்தியை எஸ் ஜானகி ஒரு நேர்காணலின்போது கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: 13 படங்களில் நடித்தும் புதுமுகம்னு சொல்லி பிரபுவுடன் ஜோடி சேர்ந்த நடிகை! அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்

google news
Continue Reading

More in Cinema News

To Top