கேரளாவை சேர்ந்த 53வயது உடைய பாடகர் கேகே, தமிழ் உட்பட, ஹிந்தி, மலையாளம் , தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். தமிழில் இவர் பாடிய பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்.
இவர் நேற்று கொல்கத்தா நகரில் நஸ்ரூல் மஞ்சா எனும் பகுதியில் இசை கச்சேரியில் பாடி கொண்டிருந்த்து, பின்னர் தனது ஹோட்டல் திரும்பியுள்ளார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே உடனடியாக தனியார் மருத்துவமனை கூட்டி சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்று கூறிவிட்டனர்.
இவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் வந்த தகவலின் படி, கேகே மரணத்தில் சந்தேகத்திற்கான தடையங்கள் இருப்பதாக போலீசார் தரப்பு கூறியுள்ளதாக சில ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ள்ளன.
இதையும் படியுங்களேன் – வெற்றிமாறன் இந்த நடிகைக்காக மட்டும் செய்த காரியம்.! அது ஒரு மாதிரியான கேரக்டர் ஆச்சே.,
அதிலும், குறிப்பாக கேகே அவர்கள் தலை , முகத்தில் காயங்கள் இருப்பதாகவும், அதன் காரணமாக உடற்கூறு பரிசோதனை செய்ய ஆயத்தமாகியுளதாமாவும், அந்த மருத்துவ அறிக்கை வந்த பின்னர் விசாரணையை தீவிரப்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளாராம்.
இது இயற்கை மரணம் இல்லை என போலீசார் சந்தேகிப்பதால், தற்போது கேகே அவர்கள் குடும்பதரப்பில் இருந்து புகார் மட்டும் பெற்று கொள்ளப்பட்டுள்ளதாம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் விசாரணை நடைபெற்று கேகே மரணத்தின் பின்னணி தெரியவரும் என கூறப்படுகிறது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…