Categories: Cinema News Entertainment News latest news

மறைந்த கே.கேவின் கடைசி தமிழ் பாடல் இதுவா? – ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமா இருக்கே !

இந்தியாவில் புகழ்பெற்ற பின்னணி பாடகர்களில் முக்கியமானவர் கே.கே எனப்படும் கிருஷ்ணகுமார் குன்னத். நேற்று கல்கத்தாவில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும்போது இவர் மாரடைப்பு ஏற்பட்டு இவர் இறந்தார்.

இவர் இந்தியாவில் தமிழ், தெலுங்கு , ஹிந்தி, கன்னடம் துவங்கி ஒடிசா, பெங்காலி என பல மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார்.

தமிழில் காக்க காக்க, மன்மதன், அந்நியன் போன்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார்.இறுதியாக சரவணன் அருள் நடிக்கும் லெஜண்ட் படத்தில் இவர் ’கொஞ்சி கொஞ்சி’ மற்றும் ’போ.போ..போ’ என்ற இரு பாடல்களை இவர் பாடியுள்ளார்.

துருதிருஷ்டவசமாக அவர் இறந்த நிலையில் அவரது இறுதி பாடல் இடம் பெற்ற பெருமையை லெஜண்ட் திரைப்படம் பெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் தற்சமயம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

Published by
Rajkumar