சினிமா யூனியன்களிலேயே இசை யூனியன் தான் முதலில் தொடங்கியது. ஆனால், கொரோனா காலத்திற்கு பிறகு அது கொஞ்சம் கூட செயல்படவே இல்லை. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தேர்தல் வைத்திருக்கின்றனர். இன்னைக்கு கூட நான் பாடுனாதான் காசு, என் பையன் வந்து பாடுனா மதிக்க மாட்டாங்க என கோபத்தை கொப்பளித்துள்ளார் பாடகர் மனோ.
ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடி மனோ பாடிய பாடலா? அல்லது எஸ்பிபி பாடலா? என்றே ரசிகர்கள் குழம்பும் அளவுக்கு அருமையான குரல் வளம் கொண்டவர் பாடகர் மனோ.
இதையும் படிங்க: அக்காவுக்கு நிச்சயதார்த்தம்!.. 2வது மேரேஜுக்கு ரெடி.. ஜோரா ரெடியான அதிதி ஷங்கர்.. போட்டோஸ் பாருங்க!
கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தபோது அவர்கள் ட்ரூப்பில் வாசித்த பல இசைக் கலைஞர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலக்கட்டத்தில் கூட அவர்களுக்கு சரியான உதவிகள் செய்யப்படவில்லை என்று பாடகர் மனோ சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஜி.வி. பிரகாஷ் குமார் என முன்னணி இசையமைப்பாளர்களும், பிரபலமான பின்னணி பாடகர்களும் செழிப்பாக இருப்பார்கள். ஆனால், அவர்களுடன் இணைந்து பணியாற்றிய இசைக் கலைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட சங்கம் செயல்படாமல் இருப்பதால், பலர், நடக்க முடியாமல், நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள். சினிமா துறையில் முதலில் தொடங்கப்பட்டது இசைக்கலைஞர்கள் சங்கம் தான். ஆனால் இதற்கு சரியான கட்டிடங்கள் எதுவும் இல்லை.
இதையும் படிங்க: குழந்தைகளை குதூகலப்படுத்த வெளியான சூப்பர்ஹிட் படங்கள்… இவ்ளோ இருக்கா?
இளையராஜா சார் எங்களுக்கு உதவி செய்யலாம் என்று பார்க்கும்போது, கொரோனா காலக்கட்டம் வந்துவிட்டது. இந்த தேர்தல் முடிவில் வரும் ஆட்சி கண்டிப்பாக இசை கலைஞர்களுக்கு, இப்போது வரும் இளம் கலைஞர்களுக்கு டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் உருவாக்க வேண்டும்.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என மற்ற சங்கங்களை சேர்ந்த கலைஞர்கள் மரணித்தால் அவர்கள் குடும்பத்திற்கு 3-4 லட்சம் பணம் கொடுக்கும் நிலையில், இருக்கிறார்கள். ஆனால் இசைக்கலைஞர்கள் சங்கம் ஒரு லட்சம் கூட கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை என்பது மனதிற்கு மிகவும் கஷ்டமாக விஷயம் என ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்து விட்டார் பாடகர் மனோ.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…