Cinema History
எம்.எஸ்.வி பாடலை பாட முடியாமல் அழுத பெண்.. பின்னளில் பிரபல பின்னணி பாடகி.. அட அவரா?!..
கேரளாவில் பிறந்து தமிழ் சினிமாவில் நுழைந்து பல நூறு இனிமையான பாடல்களை கொடுத்து மெல்லிசை மன்னராய் மாறியவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன். 1940 முதல் தமிழ் திரையுலகில் இசையமைக்க துவங்கினார். 80களில் எப்படி இளையராஜா இருந்தாரோ அப்படி 60களில் கொடிகட்டி பறந்தவர் இவர். இளையராஜா வரும் வரை சுமார் 30 வருடங்கள் இசை உலகில் கோலோச்சியவர் இவர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், நாகேஷ், முத்துராமன் என 60களில் கோலோச்சிய எல்லா நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். பல திரைப்படங்களில் ராமமூர்த்தியோடு இணைந்து பாடல்களை எம்.எஸ்.வி உருவாக்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்காக சென்சாரையே ஏமாற்றி பாடல் எழுதிய வாலி!.. கவிஞர் செம கில்லாடிதான்!..
எம்.எஸ்.விக்கு 4 வயது இருக்கும்போதே அவரின் தந்தை இறந்துவிட்டார். எனவே, எம்.எஸ்.வியை கொன்றுவிட நினைத்தார் அவரின் அம்மா. ஆனால், கடைசி நிமிடத்தில் அவரை காப்பாற்றியது அவரின் தாத்தாதான். அதன்பின் ஒரு தியேட்டரில் முறுக்கு, பிஸ்கட் செய்யும் வேலையில் சேர்ந்தார் எம்.எஸ்.வி.
திரைப்படங்களில் வரும் பாடல்களில் வரும் இசை எம்.எஸ்.விக்கு மிகவும் பிடித்துபோனது. அதன்பின் இசையமைபபாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவிடம் உதவியாளராக சேர்ந்து சினிமாவுக்கான இசையை கற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் எம்.எஸ்.வி தனியாக இசையமைக்கவும் துவங்கினார்.
இதையும் படிங்க: அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..
இரவில் எம்.எஸ்.வியின் மெல்லிசை பாடல்களை கேட்டால் தாலாட்டுவது போல இருக்கும். ஒருமுறை மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணியின் படம் ஒன்றுக்காக ஒரு பாடல் பதிவு நடந்தது. அந்த பாடலை பாட ஒரு புதுப்பாடகி வருகிறார். அந்த பாடலை எப்படி பாட வேண்டும் என எம்.எஸ்.வி சொல்லிக்கொடுத்துவிட்டு வெளியே வந்து காத்திருந்தார்.
அவர் வெளியே வந்ததும் அந்த பெண் அழ துவங்கிவிட்டார். அங்கிருந்தவர்கள் அந்த பாடகியிடம் சென்று ‘ஏன் அழறீங்க’ என கேட்டும் அவர் பதில் சொல்லாமல் தொடர்ந்து தேம்பி தேம்பி அழுதுகொண்டே இருந்தார். இந்த தகவல் எம்.ஸ்.விக்கு சொல்லப்பட்ட அவரும் ஓடிவந்து அந்த பாடகியிடம் கேட்க அந்த பெண் எந்த பதிலும் சொல்லவில்லை. உடனே இந்த தகவல் அந்த பெண்ணின் கணவருக்கு சொல்லப்பட்ட அவர் ஸ்டுடியோவுக்கு வந்து அவரின் மனைவியிடம் பேசினார்.
அதன்பின்தான் ‘எம்.எஸ்.வி சார் சொல்லி கொடுத்தது போல் என்னால் பாடமுடியவில்லை. அதான் அழுகை வந்துவிட்டது’ என சொன்னார். அப்படி சொன்ன பாடகி வேறு யாருமல்ல. பின்னாளில் அதே எம்.எஸ்.வியின் இசையில் பல இனிமையான பாடல்களை பாடிய பி. சுசீலா.