அந்த பாடலை பாடும்போதே அழுத பி.சுசிலா!.. சொந்த வாழ்வில் பாடகிக்கு இப்படி ஒரு சோகமா?..

Published on: May 22, 2024
suseela
---Advertisement---

சினிமாவில் மகிழ்ச்சியாக ஆடி பாடும் நடிகர்களின் சொந்த வாழ்வில் பல சோகங்கள் இருக்கும். அதையெல்லாம் காட்டி கொள்ளாமல்தான் நடிக்க வேண்டும். இது பல நடிகர்களுக்கும் பொருந்தும். சொந்த வாழ்வின் பிரச்சனைகளை, சோகங்களை, மன உளைச்சல்களை கேமரா முன்பு காட்ட முடியாது.

இது நடிகர்களுக்கு மட்டுமல்ல. இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட எல்லா தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பொருந்தும். அதிலும், நடிகர்களுக்கு இது அதிகம் நடக்கும். அம்மா, அப்பாவோ மரணம் அடைந்திருப்பார். ஆனால், அன்று ஷுட்டிங்கில் சிரித்துகொண்டே நடிக்க வேண்டும். படப்பிடிப்பு முடிந்தபின்னரே கடமையை செய்ய செல்ல முடியும்.

இதையும் படிங்க: கவர்னரிடமே கெத்து காட்டிய கமலின் அப்பா!.. விதையே அவர் போட்டதுதான்!.. செம மேட்டரு!..

இதனால்தான் கவிஞர் வைரமுத்து ‘ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான். தன் கண்ணீரை மூடிகொண்டு இன்பம் கொடுப்பான்’ என ஒரு பாடலில் எழுதியிருப்பார். கலைஞர்களுக்கு மட்டுமல்ல.. இது பாடகர் மற்றும் பாடகிகளுக்கும் பொருந்தும். தமிழ் சினிமாவில் பல இனிமையான பாடல்களை பாடியவர் சித்ரா.

சின்னக்குயில் சித்ரா என ரசிகர்கள் என அழைப்பார்கள். இவருக்கு திருமணமாகி பல வருடங்கள் கழித்து ஒரு மகள் பிறந்தாள். ஆனால், அவர் சந்தோஷம் சில வருடங்கள் கூட நீடிக்கவில்லை. அந்த குழந்தை இறந்துவிட்டது. பாலச்சந்தர் இயக்கிய கல்கி படத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்துடன் ஒரு தாய் பாடும் பாடல் அப்படத்தில் வரும்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் அரசியலை விமர்சித்த கண்ணதாசன்… அதுக்கு புரட்சித்தலைவர் கொடுத்த பதிலடியைப் பாருங்க..!

அந்த பாடலை பாடும்போதே அவர் அழுதுவிட்டதாக அப்போது செய்திகள் வெளியானது. இதுபோன்ற சம்பவம் பின்னணி பாடகி பி. சுசிலாவுக்கும் நடந்திருக்கிறது.1964ம் வருடம் சிவாஜியின் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம்தான் புதிய பறவை. இந்த படத்தில் ‘உன்னை ஒன்று கேட்பேன்’ என்கிற அற்புதமான பாடலை அவர் பாடியிருப்பார்.
அந்த பாடலில் ‘காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை. தாலாட்டு பாட தாயாக வில்லை’ என ஒரு வரி வரும்.

suseela

இந்த வரியை பாடும்போது பி.சுசிலா தன்னையும் அறியாமல் கண்கலங்கினார். அதற்கு காரணம் இருக்கிறது.  1957ம் வருடம் அவருக்கு திருமணம் ஆனது. இந்த பாடலை அவர் பாடியது 1964ம் வருடம். இந்த எட்டு வருடங்களும் அவருக்கு குழந்தை இல்லை. அதன் காரணமாகவே அவர் கண்கலங்கினார். ஆனாலும், 1968ம் வருடம் அவருக்கு குழந்தை பிறந்து தாயாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.