பத்மபூஷன் விருதை நிராகரித்த பாடகி எஸ்.ஜானகி... கெத்து இருந்தாதான் இப்படி காரணம் சொல்ல முடியும்!
இந்தியாவின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மபூஷனையே வேண்டாம் என மறுத்து விட்டார் பாடகி எஸ்.ஜானகி. இதற்கு என்ன காரணம் என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை சொந்த சகோதரர் மாதிரி பார்த்தவர் தான் எஸ்.ஜானகி. இருவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே பாடலைக் கேட்ட உடனே பாடி விடுவார்களாம். இருவரும் சேர்ந்து பாடி அசத்திய பாடல்கள் பல உண்டு. எஸ்.பி.பி.க்கு ஜானகி பாட வந்துவிட்டால் குஷியாகி விடுவாராம். இருவரும் இணைந்து பாடிய எல்லா பாடல்களுமே சூப்பர்ஹிட்கள் தான்.
இருவருமே திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்களாம். பத்மபூஷன் என்ற அரிய விருதை எஸ்.ஜானகி மறுத்து விட்டார்கள். இதற்கு காரணம். இந்த விருது மிகவும் தாமதமாக வந்தது. இந்த வருது 56 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது வந்ததாம். 57ல் பாட வந்தார்கள். 2013ல கொடுத்தார்களாம். அதனால் தான் நிராகரித்தாராம்.
இன்னொரு காரணம், தென்னிந்திய இசைக்கலைஞர்களைத் தொடர்ந்து மத்திய அரசு புறக்கணித்தே வருகிறது. அதுவும் ஒரு காரணம். குறிப்பாக இசை அமைப்பாளர்களில் பல சாதனைகளைப் பண்ணியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கே தேசிய விருதை வழங்கவில்லை. எல்லா கோபமும் சேர்ந்து தான் அவர் பத்மபூஷன் விருதை நிராகரித்ததற்குக் காரணம் என்று சொல்லலாம்.
இதையும் படிங்க... டேனியல் பாலாஜியின் மரணம்.. கோயிலில் நடந்த அதிசயம்! கதிகலங்கி நிற்கும் ஆவடி மக்கள்
சிறந்த பாடகிக்கான தேசிய விருது 2 முறை. அவற்றில் ஒன்று, பதினாறு வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப்பூவே பாடலுக்குக் கிடைத்தது. அடுத்ததாக, தேவர் மகனில் பாடிய இஞ்சி இடுப்பழகா பாடலுக்குக் கிடைத்தது.
மேடையில் பாடுவதைப் பார்த்து அவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் ராம்பிரசாத். இருவரும் இணைபிரியாத ஜோடிகள். ஜானகிக்கு திருமண வாழ்க்கை முடிந்து 39 வயதாக இருக்கும் போது இவரது கணவர் மறைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சொல்லப்போனால், தேசிய விருது கிடைத்ததும் கூட லேட் தான். 1957ல் பாடவந்த இவருக்கு 1977ல் தான் அதாவது 20 வருடங்களுக்குப் பிறகு தான் 16 வயதினிலே படத்துக்கு முதல் தேசிய விருதே கிடைத்ததாம்.