ஜீவாவுக்கு நடிகைகள் கொடுத்த பாலியல் தொல்லை!.. கொளுத்திப்போட்ட சுசித்ரா!...

Actor Jiva: திரையுலகம் தொடர்பான பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திப்பது என்பது காலம் காலமாக இருந்து வந்தாலும் இப்போது மிகவும் அது அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம். எல்லா துறையிலுமே இது இருந்தாலும் திரையுலகத்தை எல்லோரும் கவனிப்பதால் அது பேசுபொருளாக மாறுகிறது.

குறிப்பாக மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண்கள் தொடர் பாலியல் தொல்லைகளை சந்திப்பதாக ஒரு புகார் இருக்கிறது. இதை விசாரிப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 2024ல் தமிழ் படங்கள் தவறவிட்டதை தட்டி தூக்கிய கோட்… ஒத்த ஆளு போதும்!

மலையாள நடிகர்கள் சித்திக், ஜெய்சூர்யா, முகேஷ், இயக்குனர் சித்திக் என பலரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் எல்லோரின் மீதும் காவல் நிலையத்தில் சில பெண்கள் புகார் கொடுத்தனர். எனவே இது விவாதப்பொருளாக மாறியது. நிவின் பாலி மீதும் ஒரு பெண் புகார் கொடுத்தார். ஆனால், அதில் ஆதாரமில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

மலையாள நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லாலும், மற்ற உறுப்பினர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். ஒருபக்கம், கோலிவுட்டில் நடிகை ரோகிணி தலைமையில் ஒரு குழுவை நடிகர் சங்கம் அமைத்திருக்கிறது. பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்தித்தால் அவரிடம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

venkat

#image_title

இந்நிலையில், நடிகர், நடிகைகள் பற்றி அந்தரங்க செய்திகளை சொல்லி வரும் பாடகி சுசித்ரா இதுபற்றி பேசியிருக்கிறார். மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகள் மிகவும் அதிகம். அதேநேரம், நடிகர்களுக்கு பெண்கள் கொடுக்கும் தொல்லையும் அதிகம். அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. சென்னையில் நடந்த பார்ட்டில் ஒன்றில் துல்கர் சல்மானை பல பெண்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவன் ஓடிப்போய் பாத்ரூமில் ஒளிந்துகொண்டான்.

அதேபோல், தனுஷும், சிம்புவும் அழைத்ததால் ஒரு பார்ட்டிக்கு வந்த நிவின் பாலி பெண்கள் கொடுத்த தொல்லையில் அங்கிருந்து ஓடியே போய்விட்டான். நடிகர் ஜீவாவை ஒரு பார்ட்டில் பெண்கள் சீண்டினார்கள். ஒரு பிரபலமான டிவி தொகுப்பாளினி ஜீவாவை விரட்டினார். அவனும் ஓடிவிட்டான். நடிகர்களுடன் படுக்கையை பகிர ஆசைப்படும் பல பணக்கார பெண்கள் இங்கே இருக்கிறர்கள். ‘என் மகளுடன் டேட்டிங் போறீங்களா?’ என பெரிய கோடீஸ்வரர்கள் தங்கள் மகளுக்காக இளம் நடிகர்களிடம் போய் பேசுவார்கள். இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்’ என சொன்னார் சுசித்ரா.

ஒரு நிகழ்ச்சியில் ‘ஹேமா கமிட்டி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என நிருபர் ஒருவர் ஜீவாவிடம் கேட்டப்போது ‘இங்கு அப்படி ஒன்றும் பிரச்சனை இல்லை’ என பதில் சொன்னார் ஜீவா. அந்த நிருபர் மீண்டும் மீண்டும் கேட்க ‘உனக்கு அறிவு இருக்கா?’ என திட்டிவிட்டு போனார் ஜீவா. சினிமா உலகில் ஆண்களுக்கே பாலியல் தொல்லை இருப்பது தெரிந்ததால்தான் அவர் அப்போது கோபப்பட்டிருக்கலாம் என கருதலாம்.

Related Articles
Next Story
Share it