இத சொல்லியே வலையில் விழ வைப்பார்! வெளியான வைரமுத்துவின் லீலைகள்
Vairamuthu: சினிமாவில் யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் மிக்க நடிகர்களின் உண்மையான சுயரூபம் இப்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக மலையாள சினிமாவில் பாலியல் ரீதியாக எழுந்த பிரச்சனைகளில் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் வெளிவந்தது பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அடுத்து தமிழ் சினிமாவிலும் இது போன்ற ஒரு ஹேமா கமிட்டி உருவானால் எத்தனையோ நடிகர்களின் தண்டவாளம் வெளியே வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலையே மலையாள சினிமாவில் நடக்கும் அந்த பாலியல் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ் நடிகர்களிடம் கேட்டால் அனைவரும் தெரிந்து ஓடுகின்றனர்.
இதையும் படிங்க: வேட்டையனில் என்னுடைய கேரக்டர் இதுதான்.. சீக்ரெட்டை உடைத்த மஞ்சு வாரியர்… ஜாலி பண்ணும் ரசிகர்கள்
அந்த வகையில் பிரபல பாடகியும் நடிகையுமான சுசித்ரா சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே சின்மயி தனக்கு நடந்த கொடுமைகளை கூறியதன் மூலம் இப்பொழுது அவருடைய நிலைமை என்ன என்பது அனைவருக்குமே தெரியும். அதை பற்றி கூறிய சுசித்ரா இப்பொழுது வாயை திறக்கும் ராதிகா குஷ்பூ சகிலா விசித்ரா சின்மயிக்கு நேர்ந்த கொடுமைகள் நேரத்தில் எங்கு போனார்கள்?
யாருமே சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுக்கலையே. இப்ப மட்டும் ஏன் பேசுறாங்க? சின்மையி மட்டும்தான் தனியாக ஒரு பத்திரிகையாளர் மீட்டிங் ஏற்பாடு செய்து வைரமுத்துவை பற்றி தனக்கு நடந்த கொடுமையை கூறினார். அதனால் நடந்தது என்ன? அவருடைய வேலை பறிபோனது தான். ஆனால் சின்மயி அன்றிலிருந்து இன்று வரை அவருடைய கருத்தில் உறுதியாக இருக்கிறார். அதை மட்டுமே தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: ஆத்தாடி…பிபி7 முடிஞ்சும் இந்த டீம் ஏ, டீம் பி அடிச்சிக்கிறத நிறுத்தலையா… இன்னொரு பஞ்சாயத்தா?
இந்த நிலையில் எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பற்றியும் கூறுகிறேன் .அதுவும் வைரமுத்துவைப்பற்றி தான். வைரமுத்துவை பொறுத்த வரைக்கும் பாடகிகளை தான் முதலில் குறி வைப்பார். அதிலும் நான் ‘மே மாதம் 98’ பாடலை பாடியிருக்கிறேன். அந்தப் பாடலைக் கேட்ட பிறகு எனக்கு போன் செய்து ‘மா உன் பாடலில் காமம் இருக்கிறது. ஒரு காதல் இருக்கிறது .உன்னுடைய வாய்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது.’ இப்படித்தான் அவர் வலையில் விழ வைப்பாராம்.
அந்தப் பாடலில் ஒன்றுமே இல்லை .காதல் இருக்கிறது என்றால் அதில் ஆடிய ரீமாசென்னை பார்த்து காதல் வரலாம் .ஆனால் அந்தப் பாட்டு நல்லாவே இருக்காது. அதைப்பற்றி அவ்வளவு பெருமையாக கூறும் போதே நமக்கு தெரிந்துவிடும். ஏதோ ஒன்னுக்கு தான் இவர் ஆசைப்படுகிறார் என.
இதையும் படிங்க: விஜய் 69 ல இது அப்டேட்டுக்கு அப்டேட்…! அது மட்டும் நடந்தா?
அதுமட்டுமில்ல வீட்டுக்கு வா உனக்கு நான் பரிசு தருகிறேன் என கூறினார். நான் என் பாட்டியுடன் போயிருந்தேன். நீ தனியா வருவேனு பார்த்தேன் என வைரமுத்து கூறினார். இல்லை நான் எங்கு போனாலும் என் பாட்டியுடன் தான் வருவேன் என்று கூறினேன். ஆனால் அவருடைய நோக்கம் நான் வந்ததும் என்னை தொட வேண்டும்.
தொட்டுப் பார்த்து ஆசைப்பட வேண்டும் என்றுதான். ஆனால் அது நடக்கவில்லை. உடனே என்னுடைய பாட்டி சரி பரிசு தருகிறேன் என்று சொன்னீர்களே பரிசு எங்கே எனக் கேட்டார். உடனே அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் வீட்டு பின்னாடி சென்று அங்கிருந்த ரெண்டு ஷாம்பு பாட்டில் எடுத்து வந்து கொடுத்தார்.
பரிசு வாங்கினால் தானே அங்க பரிசு இருக்கும். அவர் என்னை அழைத்ததே வேறு எதுக்கோ. அதன் பிறகு என் பாட்டி வைரமுத்துவிடம் உங்களைப் போன்றவர்களால்தான் இந்த மாதிரி பிள்ளைகள் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்.
நீங்கள் அடுத்த தலைமுறைக்கு ஒரு தந்தை போல என்று சொன்னதுமே வைரமுத்துவுக்கு வியர்த்து விட்டது. அதன் பிறகு வந்து விட்டோம். இருந்தாலும் தொடர்ந்து அவர் தரப்பிலிருந்து எனக்கு போன் வந்து கொண்டே இருந்தது. நான் கட் பண்ணி விடுவேன் என வைரமுத்துவை பற்றி சுசித்ரா அவருக்கு நடந்த சம்பவத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.