நடிகைகள் செய்த லீலை! தெறித்து ஓடிய நிவின் பாலி! எல்லாமே பிளான்!.. பாடகி சுசித்ரா பகீர்!..
Nivn pauly: திரையுலகம் தொடர்பான பாலியல் புகார்கள் என்பது ஊடகங்களுக்கு எப்போதுமே தீனிதான். யார் யார் மீது என்ன புகார் சொன்னாலும் ரசிகர்களும் அதை அப்படியே நம்புவார்கள். அதற்கு காரணம், நடிகர் என்றாலே அப்படித்தான், நடிகைகள் எல்லோருமே அப்படித்தான் என்கிற பொதுவான பார்வை இங்கு எல்லோருக்கும் இருக்கிறது.
அது திரையுலில் இருக்கும் பலருக்கும் சாபக்கேடுதான். ஏனெனில், ஒழுக்கமான நடிகர், நடிகைகளையும் ரசிகர்கள் அப்படியே நினைப்பார்கள். அதற்கு காரணம் உளவியல் ரீதியாகவே நடிகர்கள், நடிகைகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் கவர்ச்சிதான். நான் அதை செய்யவில்லை என சம்பந்தப்பட்ட நடிகரோ, நடிகையோ சொன்னாலும் நம்பமாட்டார்கள்.
அதேநேரம், திரையுலகில் பெண்கள் பாலியல் தொல்லைகளை சந்திப்பது என பல வருடங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. சிலர் அதை செய்வதுண்டு. வாய்ப்புக்காக சில பெண்கள் அதற்கு சம்மதிப்பதும் உண்டு. பாலியல் தொல்லையை சந்தித்த பெண்கள் வெளியே சொன்னால் வாய்ப்பு கிடைக்காது என்பதற்காக வெளியே சொல்ல மாட்டார்கள்.
சமீபத்தில் மலையாள சினிமா உலகை ஹேமா கமிட்டி அறிக்கை உலுக்கியது. அதில், பல முன்னணி நடிகர்கள் சிக்கினார்கள். ஜெய் சூர்யா, முகேஷ், சித்திக், பாபுராஜ், இயக்குனர் ரஞ்சித் என பலரின் பெயரும் அடிப்பட்டது. இதில், சிலர் முன் ஜாமீன் பெற்றார்கள். மோகன்லால் உள்ளிட்ட நடிகர் சங்க பதவியிலிருந்தவர்கள் ராஜினாமா செய்தார்கள். இந்த விவகாரம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல், பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான நிவின் பாலி மீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தார். ஆனால், அவர் சொன்ன குறிப்பிட்ட தேதியில் நிவின் பாலி வேறு இடத்தில் இருந்த ஆதாரமும் சிக்கியிருக்கிறது. இந்நிலையில், திரைத்துறையை சேர்ந்த பலரை பற்றியும் பரபரப்பான செய்திகளை சொல்லும் பாடகி சுசித்ரா நிவின் பாலி பற்றிய செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நிவின் பாலி அப்படிப்பட்டவரே இல்லை. ஒருமுறை தனுஷும், சிம்புவும் கட்டாயப்படுத்தி அவரை ஒரு பார்ட்டிக்கு அழைத்தார்கள். அவர் வந்தது தெரிந்ததால் அங்கு பல இளம் பெண்கள் வந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட அவருக்கு பாலியல் தொல்லையே கொடுத்தார்கள் அங்கிருந்து ஓடியே போய்விட்டார். கேரளாவிலும் அப்படித்தான் நடந்திருக்கும். துல்கர் சல்மான் பெண்கள் டார்ச்சர் பிடிக்காமல் ஒருமுறை பாத்ரூமில் போய் ஒளிந்து கொண்டார்.
பணக்கார பெண்கள் மற்றும் நடிகைகைளே இதை செய்வார்கள். பணக்கார பெண்கள் அவரின் ஆசை நிறைவேறாவிட்டால் விஷப்பாம்பாக மாறிவிடுவார்கள். அவர்கள் எல்லாம் ஹேமா கமிட்டியை பயன்படுத்தி நல்ல நடிகர்கள் மீதும் பொய் புகார் கொடுப்பார்கள். நிவின் பாலி விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கும், தங்களை பற்றி செய்திகள் பரவுவதை மடைமாற்றம் செய்வதற்காக மோகன்லால், மம்முட்டி போன்ற நடிகர்கள் கூட இதன் பின்னணியில் இருப்பார்கள்’ என அவர் பேசினார்.
இதையும் படிங்க: ஏம்ப்பா.. தலன்னு சொன்னது அவரைத்தான்!.. பஞ்சாயத்தை முடித்து வைத்த வெங்கட்பிரபு!…