தாய் - தந்தையை பெருமைப் படுத்திய சூப்பர் ஹிட் பாடல்!.. பாடியது இந்த நடிகையின் மகளா?..
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் தந்தை பாடல். தாய் பாடல், அண்ணன் தங்கை பாசப் பாடல், நண்பர்கள் பாடல் என அனைத்து உறவுககளுக்கும் ஏற்ற வகையில் ஏராளமான பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. அதுவும் அன்னைக்காக மட்டுமே அதிகமாக அந்த காலத்தில் இருந்து இன்றைய கால சினிமா வரைக்கும் ஏகப்பட்ட பாடல்கள் வந்துள்ளன.
ஆனால் தாய் - தந்தை என இருவருக்கும் அர்ப்பணிப்பாக அமைந்த ஒரே பாடல் மற்றும் மிகவும் தனித்துவமான பாடல் என்றால் அது ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்ற பாடல் தான். இந்த பாடல் அமைந்துள்ள படம் ‘அகத்தியர்’.
1972 ஆம் ஆண்டு வெளியான அகத்தியர் படத்தை ஏ.பி. நாகராஜன் இயக்கியிருந்தார். அவரே தயாரித்தும் இருந்தார். படம் வெளியாகி 100 நாள்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடியது. படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், மனோரமா, சீர்காழி கோவிந்தராஜன் என பல நடிகர்கள் நடித்து வெளியான அகத்தியர் படம் தான் குன்னக்குடி வைத்தியனாதனுக்கும் முதல் படம்.
இதையும் படிங்க : எப்படிப்பா? இவர வைச்சு அந்தப் படமா?.. இடியாப்பச் சிக்கலில் இருக்கும் வித்தியாசமான கூட்டணி..
அவர் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் அகத்தியராக சீர்காழி கோவிந்தராஜன் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பெரிய ப்ளஸாக அமைந்ததே தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்ற பாடல் தான். கிட்டத்தட்ட 40 வருடங்களை கடந்தும் இன்னும் பல கோயில்களிலும் விழாக்களிலும் இந்த பாடலை கேட்காமல் நம்மால் கடந்து போக முடியாது.
அப்படி பட்ட பாடலை பாடிய பெருமை பாடகி டி.ஆர். கலா. இவர் பிரபல நடிகை சண்முக சுந்தரியின் மகளாவார். சண்முக சுந்தரி பல படங்களில் நடித்தவர். குறிப்பாக சொன்னால் வடிவேலுவுக்கு அம்மாவாக ஒரு காமெடி காட்சியி ‘இது வேற வாய், அது நார வாய்’ என்று குடித்துக் கொண்டு அம்மாவை அடிப்பாரே அந்த அம்மா தான் சண்முக சுந்தரி.
அந்த சண்முக சுந்தரியின் மகள் தான் டி.ஆர். கலா. சிறுவயதில் இருந்தே பல படங்களுக்கு பாடியிருக்கிறாராம். மேலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்திருக்கிறாராம்.அந்த பாடலை கேட்கும் போது இப்பொழுதும் நம் மனதில் தேன் வந்து பாய்வது போல உணர்வை ஏற்படுத்தும்.