இரவின் நிழல் புதுமையிலும் புதுமையான படம்...! பார்த்திபனும் அவரது தலைப்புகளும் சொல்வது என்ன?
நடிகர் பார்த்திபன் எதைச் செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று தணியாத தாகம் கொண்டவர். அவரது கவிதைகளின் தொகுப்புகளுக்கு கிறுக்கல்கள் என்று பெயரிட்டு புத்தகமாக வெளியிட்டார். இவரது முதல் இயக்கத்தில் வெளியான படம் புதிய பாதை.
படத்தின் பெயரை ஹவுஸ் புல் என்று வைத்தார். தலைப்புக்கு ஏற்றாற்போல படம் ஓடும் திரையரங்கம் எல்லாமே ஹவுஸ்புல்லாக நிரம்பி வழிந்தது. வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் போல பொண்டாட்டி தேவை என்ற தலைப்பில் படம் எடுத்தார். கட்சிகளில் எத்தனையோ உண்டு. தமிழக அரசியலில் கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இவர் தன் படத்திற்கு இட்ட பெயரோ சோத்துக்கட்சி. ஆனால் இந்தப்படம் வரவில்லை.
தனது மற்றொரு படத்திற்கு இவர் வைத்துள்ள பெயர் உள்ளே வெளியே. டைட்டிலில் என்ன சொல்ல வருகிறார் என்பதே நிறைய பேருக்கு தெரியவில்லை. அதனாலேயே படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. படத்தின் தலைப்புக்கு அவர் கொடுக்கும் நக்கல் பேச்சு செமயாக இருக்கும். குடைக்குள் மழை, சுகமான சுமைகள், கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, ஒத்த செருப்பு சைஸ் 7 இந்தத் தலைப்புகளை வாசிக்கும்போதே உங்களுக்கு அதில் என்ன புதுமை என்பது தெரிந்துவிடும்.
தற்போது உலகளவில் யாருமே செய்யாத சாதனையாக சிங்கிள் ஷாட்டில் படம் முழுவதும் எடுத்து முடித்துள்ளார். படத்தின் பெயர் இரவின் நிழல். அதெப்படி இரவில் நிழல் வரும்? என்கிறீர்களா? படத்தின் தலைப்பில் புதுமைக்காட்டும் நாயகன் தான் இந்த புதுமைப்பித்தன்.
இரவு என்றால் இருளாகத் தான் இருக்கும்? இருளுக்கு ஏது நிழல் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். எழ வேண்டும் என்று தான் இந்த டைட்டிலையே வைத்துள்ளார். இந்தப்படத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளனர். 52 செட் போடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்த பின் செலவு ரூ.23 கோடி.
படத்தின் அத்தனையும் புதுமுகம். எந்த விதமான பதட்டமும் இன்றி நேர்த்தியாக எடுத்து முடித்து சாதனை படைத்துள்ளார் பார்த்திபன். 96 நிமிடங்கள் ஓடும் படம். இந்தப்படம் இப்படி எடுத்திருக்க முடியாது என்று அனைவரும் சொல்ல அவர்களின் குறையைப் போக்கும் விதமாக மேக்கிங் வீடியோ போடப்பட்டு காட்டப்பட்டுள்ளது.
அதன் பிறகு தான் படமே சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதை உணர்ந்தனர். நம்பினர். மேக்கிங் தெரிஞ்சிக்கிட்டு படம் பார்த்தவங்க தான் ரொம்ப இம்ப்ரஸாகி படம் பார்த்தாங்க. இந்தப்படத்திற்கான டீசர் தற்போது வெளியிடப்பட்டது.
உலக சினிமாவாக உருவாகக் காரணம் பார்த்திபன் சார் தான். இவர் தான் சினிமாவிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார். பட விழாவிற்கான அழைப்பிதழ் கூட வித்தியாசமாக வடிவமைத்திருப்பார்.
படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவ்வாறு கூறுகிறார்.
படம் ஆரம்பிச்சதிலே இருந்து ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. இது எப்படி முடிஞ்சது? தமிழ்சினிமாவில தான் மிகச்சிறந்த இயக்குனர்கள் இருக்காங்க. எல்லாருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான். தமிழ்சினிமாவை உலகத் தரத்திற்குக் கொண்டு போய் சேர்த்துள்ளார் பார்த்திபன்.
இந்தப்படம் பார்த்த பிறகு மிகப்பெரிய மரியாதை வந்தது. இந்தப்படம் முடியும்போது அனைவரின் கண்களிலும் கண்ணீர் வந்தது. நல்லா எடுத்து முடிச்சிட்டோம்ங்கற ஆனந்த கண்ணீர் அது. மற்றொரு பிரம்மாண்டம் ஏ.ஆர்.ரகுமானின் இசை இந்தப்படத்தில் உள்ளது என்றார். இந்தப்படத்தில் கடுவெளி சித்தரின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 3 பாடல்களை பார்த்திபன் எழுதியுள்ளார். ஒரு பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசுகையில், இந்தப்படத்தில் நலிவுற்ற மக்களின் வாழ்க்கை படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. கள்ள உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் சாவது பற்றி இந்தப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. பார்த்திபன் இன்னும் பெரிய உயரத்திற்குச் செல்வார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.