மட்டமான ரோகிணி… கலாய்த்து தள்ளும் ஸ்ருதி… இன்னும் முடிவு கட்டலமா இருக்கு ஆட்டம் இன்னும்!

by Akhilan |   ( Updated:2025-04-06 01:05:14  )
மட்டமான ரோகிணி… கலாய்த்து தள்ளும் ஸ்ருதி… இன்னும் முடிவு கட்டலமா இருக்கு ஆட்டம் இன்னும்!
X

siragadika aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய வார புரோமோவில் நடக்க இருக்கும் தொகுப்புகள் குறித்து வெளியாகி இருக்கிறது.

சிறகடிக்க ஆசை தொடரில் நெகட்டிவ் கேரக்டராக அறிமுகமானவர் ரோகிணி. ஏற்கனவே கல்யாணம் ஆகி கணவனை இழந்து ஒரு மகனுடன் இருப்பவர் தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை எனக் கூறி மனோஜ் கல்யாணம் செய்து கொள்கிறார்.

அது மட்டுமில்லாமல் தான் மலேசியாவில் இருந்து வந்த பெரிய வீட்டுப் பெண் என அவர் கூறிய இரண்டு பொய்கள் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இந்நிலையில் இதில் முக்கிய பொய்யான பணக்காரி வேடம் சமீபத்தில் முடிந்திருக்கிறது.

ரகசியம் உடைந்த போது ரசிகர்கள் பலர் இதை கனவாக தான் இருக்கும் என நம்பி வந்தனர். இரண்டு மூன்று எபிசோடுகள் கடந்த பின்னரே இது உண்மை என ரசிகர்களே நம்பும் நிலைக்கு இருந்தது. தன்னுடைய பேவரிட் மருமகளாக வைத்திருந்தார் ரோகிணி இப்படி ஏமாற்றியதை விஜயாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதனால் அவரை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார். அண்ணாமலை அவருடைய அம்மாவை அழைத்து வந்து சமாதானம் செய்து மீண்டும் ரோகையை வீட்டிற்குள் வரவைத்து விட்டார். முதல் நாளிலேயே ரோகிணி இனிமேல் ஷோரூம் வரக்கூடாது என கண்டிஷன் போட்டுவிட்டார் விஜயா.

தொடர்ந்து இனி அவரை எப்படி நடத்தப் போகிறார் என அவரின் கடைசி மருமகள் ஸ்ருதிக்கு இருக்கும் அதே ஆர்வம் ரசிகர்களுக்கும் இருக்கிறது. அந்த வகையில் இனிமேல் ரோகிணியையே சமைத்துக்கொள்ள கூறிவிட்டாராம். அதனால் அவர் சமைத்து கொண்டு இருக்கிறார்.

இதை பார்க்கும் மீனா என்ன நீங்க சமைக்கிறீங்க எனக் கேட்க ஆண்ட்டி என்ன சமைச்சிக்க சொல்லிட்டாங்க என்கிறார். பேவரிட் மருமக இப்போ சோறு செய்யும் மருமகளா மாறிட்டாங்களா என்கிறார். ஆண்ட்டி எப்படி நடத்த போறாங்கனு நினைச்சாவே காமெடியா இருக்கு என ஸ்ருதி சிரிக்க மீனாவும் சிரிக்கிறார். இதில் கடுப்பாகி நிற்கிறார் மீனா.

Next Story