சத்யாவை கடத்தும் சிட்டி… உடைந்த தங்கமயிலின் ரகசியம்… களைக்கட்டும் விஜய் டிவி புரோமோக்கள்!

siragadikka aasai
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள் குறித்த வீக் எண்ட் புரோமோ வெளியாகி இருக்கிறது.
ரோகிணி வீட்டில் சிக்கியதால் அவரை விஜயா தொல்லை கொடுத்து வருகிறார். இருந்தும் ரோகிணி மனோஜின் நம்பிக்கையை சம்பாரிக்க அமைதியாக சென்று வருகிறார். கடையில் தொடர்ந்து மனோஜிடம் ரோகிணி புகழ் பாடப்படுவதால் அவர் மனம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் கிரிஷ் ரகசியம் வேறு இருப்பதால் ரோகிணியின் நிலை குறித்து என்னவாகும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் சிட்டி வேறு குடைச்சல் கொடுத்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே சத்யாவை கணக்கு எழுத அழைத்த போது அவர் வரவில்லை.

இதனால் தேர்வு எழுத விடமாட்டேன் என மிரட்டி இருந்தார். இந்நிலையில் சத்யாவை காணவில்லை என சீதா முத்துவிற்கு கால் செய்கிறார். உடனே முத்து செல்வத்தை அழைத்துக்கொண்டு சென்று தேடப்போய் இருக்கிறார். அருணுக்கு சீதா கால் செய்து சொல்லி தேட சொல்லுகிறார்.
சிட்டி சத்யாவை கடத்தி வைத்து இருக்கிறார். அவருக்கு போதை ஊசி போடுவேன் என அவர் மிரட்டிக்கொண்டு இருக்கும் போது முத்து வருகிறார். என்ன நடக்கும் சிட்டி ஊசியை போடுவாரா இல்லை முத்து காப்பாற்றி விடுவாரா என்பதை பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் அரசியின் கல்யாண வேலை வேறு தொடங்கப்பட்டு இருக்கிறது. உமையாள் வேறு வரதட்சணை பெரிய அளவில் கேட்டு இருப்பதால் பாண்டியன் என்ன செய்யலாம் என முழித்து கொண்டு இருக்கிறார்.
இதற்கிடையில் தங்கமயில் ஹோட்டலில் வேலை செய்வது கதிருக்கு தெரிந்து விடுகிறது. தங்கமயில் அதுகுறித்து அவர் பேச வரும்போது திட்டிவிட்டு செல்கிறார். சரவணன் அப்பா பிள்ளை என்பதால் கண்டிப்பாக இதை பாண்டியனிடம் சொல்லாமல் இருக்கவே மாட்டார். இதனால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.