Siragadikka Aasai: விஜயா மூக்கை உடைத்த முத்து… மீனாவின் அடுத்த முயற்சி பலனளிக்குமா? என்ன நடக்கும்?

by Akhilan |
Siragadikka Aasai: விஜயா மூக்கை உடைத்த முத்து… மீனாவின் அடுத்த முயற்சி பலனளிக்குமா? என்ன நடக்கும்?
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

விஜயா அண்ணாமலையிடம் அவன் என்ன சொல்ல வரானு புரியுதாங்க. நம்ம வீடு அடகு வச்சிருக்க இடத்தில இன்னும் காசு வாங்கி தரச் சொல்றான் என்கிறார். ஆமா அவன் எதுக்கு பேசுவான் என மனோஜ் இப்படியே வாங்குனா பெரிய தொகையா வந்துரும் என்கிறார்.

கடுப்பான முத்து என்ன அம்மா பேசி முடிச்சிட்டீங்களா? ஓடுக்காளி உன் பாயிண்ட்டை முடிச்சிட்டியா என்கிறார். நான் அந்த காசெல்லாம் கேட்கலை எனக் கூற வர இப்போ அம்மா சத்தம் போட்டதும் பேச்சை மாத்திட்டான் என்கிறார் மனோஜ்.

உடனே ஸ்ருதி ஆண்ட்டி நான் சொன்ன மாதிரி நீங்க அவசரக்குடுக்கை தான் என்கிறார். முத்து, பாட்டியிடம் கேட்கலாம்னு தான் உன்கிட்ட சொல்ல வந்தேன்பா எனக் கூற அண்ணாமலை விஜயாவிடம் பாத்துக்கோ என்கிறார். அவர் நீ கேளுடா பாட்டிக்கும் உனக்கு செய்றதுல சந்தோஷம் தான் என்கிறார்.

எல்லாரும் செல்ல மீனா முத்துவிடம் பாட்டியிடம் கேட்க வேண்டாம் என்கிறார். ஏன் மீனா எனக் கேட்க அவங்களே இந்த வயசுல கஷ்டப்பட்டு சம்பாரிக்கிறாங்க. நம்ம அவங்களா கஷ்டப்படுத்த வேண்டாம். எனக்கு முன்னாடி ஹெல்ப் செஞ்ச பைனான்சியரிடம் சென்று கேட்டு பார்க்கிறேன் என மீனா கூறுகிறார்.

பார்வதி வீட்டுக்கு வரும் விஜயா உடனே கேசரி செய் எனக் கூறுகிறார். ஏன் என அவர் கேட்க சந்தோஷமான விஷயம் தான். நீ நான் சிந்தாமணி வந்ததும் சொல்றேன் என்கிறார். அப்போ சிந்தாமணி வர என்ன மாஸ்டர் இரண்டு நாள் லீவுனு சொன்னீங்க. இப்போ வரச் சொல்லி இருக்கீங்க என்கிறார்.

அந்த மீனா ஆர்டருக்கு எங்க வீடு மேல காசு கேட்க வந்தா நான் சத்தம் போட்டதும் பேச்சை மாத்திட்டா எனக் கூறுகிறார். அவளுக்கு காசு கிடைக்காது. அதனால் உங்களுக்கு தான் ஆர்டர். அவளுக்கு கிடைக்காது எனக் கூறி இருவரும் சந்தோஷப்படுகின்றனர்.

மீனா பைனான்சியரை பார்க்க வர அவர் விஷயம் தெரிந்ததும் என்னால் காசு தர முடியாது என மறுக்கிறார். சார் உங்களை நம்பி வந்தேன் என மீனா கேட்க தெரியுமா. ஆர்டர் எடுத்தா வந்து சொல்லு இது டெபாசிட் எல்லாம் எனக்கு தர மனசு இல்லை என்கிறார்.

வருத்தத்துடன் மீனா செல்ல பைனான்சியரின் அசிஸ்டண்ட் ஏன் சார் நீங்க ஹெல்ப் செய்வீங்கனு நினைச்சேன் என்கிறார். அந்த பொண்ணு மோதுறது சிந்தாமணியிடம். அவ ஆர்டர் கிடைக்க என்ன வேண்டாலும் செய்வா. ஆனா இந்த பொண்ணுக்கு எப்போ ஹெல்ப் பண்ணனும்னு எனக்கு தெரியும் என்கிறார். வெளியில் வரும் மீனா முத்துவிடம் கால் செய்து அவர் முடியவில்லை எனக் கூறுகிறார்.

Next Story