Siragadikka Aasai: சிந்தாமணியை வலையில் சிக்க வைக்க போகும் முத்து… கைப்பற்றப்படுமா மீனா பணம்…

by Akhilan |
Siragadikka Aasai: சிந்தாமணியை வலையில் சிக்க வைக்க போகும் முத்து… கைப்பற்றப்படுமா மீனா பணம்…
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த பரபரப்பு தகவல்கள்.

சீதா மற்றும் அருண் இருவரும் போனில் பேசிக் கொண்டிருக்கின்றனர். உங்களுடைய காசை நான் எப்படியாவது தந்து விடுகிறேன் எனக் கூறுகிறார் சீதா. அதெல்லாம் இருக்கட்டும் நடந்த விஷயத்தில் உன் மேலோ உங்க அக்கா மேலோ எந்த தப்பும் இல்லை.

நீ எந்த இடத்தில பணத்தை தொலைச்சாங்கன்னு சொல்லு நான் கண்டுபிடிக்க சொல்கிறேன் என்கிறார். அதெல்லாம் இருக்கட்டும் ஏற்கனவே கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. மாமாவும் தேடிட்டு இருக்காரு. நீங்க ட்ரைனிங் முடிச்சிட்டு வாங்க என்கிறார்.

அப்படியெல்லாம் உன்ன பத்தி யோசிக்காம இருக்க முடியாது. நீ விஷயத்தை சொல்லு எனக் கூற நீங்க வாங்க பேசிக்கலாம் என கூறும் சீதா அம்மாவிற்கு இன்று செக்கப் இருப்பதாக கூறுகிறார். நானே மறந்தாலும் நீ மறக்க மாட்டாய் என தெரியும் எனக் கூறி அருண் ஃபோனை வைக்கிறார்.

பார்வதி வீட்டிற்கு வரும் முத்து மீனாவின் பணம் குறித்த விஷயத்தை சொல்லி அழுது நாடகம் போடுகிறார். மொத்த பணமும் போச்சு என்ன பண்ண போறோம் என தெரியவில்லை என அவர் அழுது கொண்டே பேச பார்வதி எனக்கு என்னமோ அந்த சிந்தாமணி மட்டும்தான் சந்தேகமாக இருப்பதாக கூறுகிறார்.

உடனே முத்து எனக்கும் அப்படி தான் அத்தை தோணுது. எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும். நாளைக்கு சிந்தாமணியை ஒரு மணி நேரம் உங்க வீட்ல வச்சுக்கணும் என்கிறார். அப்போ அவ வீட்ல இருந்து நான் காசை எடுத்து விடுவேன் என முத்து கூற பார்வதியும் சரி என சம்மதிக்கிறார்.

வெளியில் வரும் முத்து செல்வத்திடம் பார்வதி அத்தையும் சிந்தாமணி மேல் தான் சந்தேகம் இருப்பதாக கூறியிருப்பதாக கூறுகிறார். பணத்தை எடுக்க தன்னிடம் ஒரு பிளான் இருப்பதாக சொல்லி செல்வதை வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

மீனா வண்டியில் சென்று கொண்டிருக்க இடையில் வழிமறிக்கும் ஒரு ஆட்டோ டிரைவர் தன்னுடைய ஆட்டோ பஞ்சர் ஆகிவிட்டதாக கூறி வண்டியில் வந்தவரை மீனாவை அழைத்து செல்லுமாறு கேட்கிறார். அவர் சொல்லிய இடத்தில் அருணின் அம்மா வந்து நிற்கிறார்.

இருவருக்கும் அடையாளம் தெரியாததால் மீனா அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் வந்து விடுகிறார். சீதா வாசலில் நின்று அவருக்காக காத்திருக்க அருணின் அம்மா சீதா மற்றும் மீனாவிற்கு இருவரையும் அறிமுகம் செய்து வைக்கிறார். உடனே சீதா எனக்கு ஒரு அக்கா இருப்பதாக சொன்னேன் இல்லையா? அது இவர்கள்தான் என்கிறார்.

உடனே அருணின் அம்மா உங்கள் குடும்பத்திற்கு உதவி செய்யும் பழக்கம் இருப்பதாக கூறுகிறார். ஒரு நர்ஸை அழைத்து சீதா அவரை உள்ளே அனுப்புகிறார். யார் இவர்கள் என மீனா கேட்க நான் ஒருவரை உனக்கு அறிமுகம் செய்து வைப்பதாக கூறினேன் தானே அவரோட அம்மா என்கிறார்..

அப்போ உன் மாமியார்னு சொல்லு என மீனா கூற சீதா என்னக்கா என்கிறார். மறுபக்கம் வீட்டில் முத்து, செல்வம், ஸ்ருதி, ரவியை அழைத்து நாளை சிந்தாமணி வீட்டுக்கு ரெய்டு போக போவதாக சொல்கிறார். ரவி பதற அவரை சம்மதிக்க வைக்கிறார்.

Next Story