Siragadikka Aasai: முத்துவின் பலே ப்ளான்… சிந்தாமணிக்கு சரியான பதிலடிதான்!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
முத்து சிந்தாமணியின் வீட்டில் இன்கம்டேக்ஸ் ஆபிஸராக சென்று பணத்தை எடுக்கலாம் என ஐடியா சொல்லுகிறார். ஆனால் ரவி பதற்றப்பட்டு அதெல்லாம் சரியாக இருக்காது. மாட்டிக்குவோம் என்கிறார். ஸ்ருதி அதெல்லாம் ஏன் நீ பயப்படுற பண்ணிடலாம் என்கிறார்.
ஸ்ருதி நீ சின்ன பொண்ணா இருக்கியே எனக் கேட்க நான் நிறைய டப்பிங் பேசி இருக்கேன். அதெல்லாம் செஞ்சிடுவேன் எனக் கூறுகிறார். ஸ்ருதி ஹெட் ஆபிசர் அவனோட அசிஸ்டெண்ட் ரவி. அவனுக்கு நான் அசிஸ்டெண்ட். எனக்கு செல்வம் அசிஸ்டெண்ட் என்கிறார்.
அடுத்த நாள் காலையில் கிளம்பலாம் என முடிவெடுக்கிறார். சிந்தாமணி வீட்டுக்கு முன் வரும் நால்வரும் ஒளிந்து இருக்கின்றனர். சிந்தாமணி மண்டபத்தில் இருந்து காசு கொடுத்து விடுவாங்க எனச் சொல்லிவிட்டு காரில் ஏறி செல்கிறார்.
உடனே நால்வரும் இன்கம்டேக்ஸ் அதிகாரியாக அவர் வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு ஸ்ருதி முதலில் செல்ல மண்டபத்தில் இருந்த ஆளாக இருப்பாங்களோ எனக் கேட்க அவர் இந்தியில் பேசி சமாளிக்கிறார். பின்னர் ரவி வந்து அதுவும் அவர்களுக்கு புரியாமல் போகிறது.

நாங்க வருமானத்துறையில் இருந்து வந்ததாக சொல்லி கொண்டு இருக்கின்றனர். சிந்தாமணி என்கிறவங்க அரசுக்கு கணக்கு காட்டாம பணத்தை சேர்த்து வச்சிருக்கதா எங்களுக்கு தகவல் வந்திருக்கதா அதற்காக சோதனை பண்ண வந்திருப்பதாக சொல்லிவிடுகின்றனர்.
உடனே அவர்கள் நாங்க எங்க அம்மா கிட்ட சொல்லணும் என போன் பண்ண போக ஸ்ருதி எல்லோருடைய மொபைலையும் வாங்க சொல்கிறார். ரவி அதையெல்லாம் வாங்கி விட ஒருத்தர் இன்னொரு மொபைலில் கால் பண்ண போக அவரை அறைந்து போனை வாங்குகிறார். இதை பார்க்கும் மற்ற மூவரும் வாயை பிளக்கின்றனர்.
வீட்டில் எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருக்க பணம் முதலில் கிடைக்காமல் இருக்கிறது. செல்வத்திடம் முத்து இரண்டரை லட்சம் ஏதாவது பீரோல தான் இருக்கும் என தேட கூறுகிறார். சரியாக ஒரு பீரோவில் இருந்து முத்து அதை எடுத்துவிட உடனே ரவி வாங்க வாங்க உடனே கிளம்பிடலாம் என சொல்லி எல்லோரையும் அழைத்து செல்கிறார்.