மாட்டிக்கினாரு ஒருத்தரு… அப்பாவை காலி செய்ய காத்திருக்கும் ரோகிணி… அப்பயும் விஜயா காண்டாகிடுவாங்களே!

by Akhilan |
மாட்டிக்கினாரு ஒருத்தரு… அப்பாவை காலி செய்ய காத்திருக்கும் ரோகிணி… அப்பயும் விஜயா காண்டாகிடுவாங்களே!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் பிரியாணியை முழுவதுமாக அடுக்கி வைத்து எல்லாரையும் சாப்பிட அழைக்கிறார். மனோஜுக்கு எச்சில் ஊறுகிறது. ரோகிணி விஜயாவை சாப்பிட கூப்பிடுகிறார். ஆனால் விஜயா மறுக்கிறார். அல்சர் வரும் ஆண்டி எனக் கூற நீங்க போய் சாப்பிடுங்க என்கிறார்.

இதனால் ரோகிணி உடனே சாப்பிட கிளம்பி விடுகிறார். விஜயா வராமல் இருந்ததை பார்க்கும் முத்து இது சும்மா சாப்பாடு இல்ல. ரம்ஜான் நோன்பு இருந்த பிரண்ட் வீட்டுல செஞ்ச பிரியாணி. இத சாப்பிட்டா நம்ம என்ன வேண்டிக்கிட்டாலும் அனைவருக்கும் நடக்கும் என்கிறார். முக்கியமாக வீட்டை விட்டு சென்றவர்கள் மீண்டும் சேர்வார்கள் எனவும் அளந்து விடுகிறார்.

இதையும் படிங்க: சூது கவ்வும் 2 படத்துல விஜய்சேதுபதி நடிக்க மறுக்க இதுதான் காரணமா?.. 3வது பார்ட் வேற வருதாம்!..

இதை நம்பும் விஜயா உடனே வந்து சாப்பிட உட்கார்ந்து விடுகிறார். அவர் ரசித்து சாப்பிட நான் பிரியாணி என சாப்பிடல. என் பையன் வரணும் தான் சாப்பிடுறேன் என்கிறார். இந்த பிரியாணி வெளிநாட்டில் இருந்து செஃப் கூப்பிட்டு வந்து செஞ்சது என்கிறார் முத்து.

இதைக்கேட்ட உடன் விஜயாவுக்கு ரோகினி அப்பா ஞாபகம் வந்து விடுகிறது. உங்க அப்பா என்ன இன்னும் வரல. இன்னுமா ஏர்போர்ட் வராம இருக்காரு என கேள்விகளை வரிசையாக அடுக்குகிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சியாகி விடுகிறார். அண்ணாமலையும் கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் ரோகிணி.

சரி சாப்பிட்டு எதா இருந்தாலும் பேசலாம் என அமைதியாகி விடுகிறார். பின்னர் ரூமில் இருக்கும் ரோகினிடம் சென்று உங்கள் அப்பா ஏன் வரல என்கிறார். எனக்கும் அதான் தெரியல ஆன்ட்டி என ரோகிணி மழுப்ப பார்க்க கோபமாகிவிடுகிறார் விஜயா. நீ சொல்றதெல்லாம் நம்ப முடியல. உங்க அப்பா என்ன மலேசியாவுக்கு அதிபரா இருக்காரு.

இதையும் படிங்க: போயஸ் கார்டன்ல பொண்ணு கேட்குதோ!.. தனுஷ் குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமை.. பிரபலம் சொன்ன சீக்ரெட்!..

உடனே உங்க அப்பா வந்தாகணும் இல்லனா இங்க உன் இடம் என்னன்னு நான் சொல்ல வேண்டி இருக்கும். மனோஜுக்காக கூட பார்க்க மாட்டேன் என மிரட்டி விட்டு செல்கிறார். இதை தொடர்ந்து ரூமில் முத்துமிடம் அது என்ன பிரியாணி எனக்கே தெரியாம எனக்கு உடைந்து குடைந்து கேட்க அவர் உண்மையை உடைத்து விடுகிறார். கடையில் தான் வாங்கினேன் என்கிறார்.

அத்தை மேல உங்களுக்கு பாசம் தானே என மீனா கேட்க அவங்க தானே எனக்கு முதல் சாப்பாடு கொடுத்தது என்கிறார் முத்து. இதைத்தொடர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்த அங்கிருந்து முத்து கிளம்புவதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Next Story