விஜயாவை லாக் செய்த மீனா… மனோஜை ஏத்திவிட்ட ரோகிணி… சிறகடிக்க ஆசையில் கலவரம்!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா வீட்டுக்கு வந்த மகாலட்சுமி திரும்ப அம்மா வீட்டுக்கே போயிட்டாள். காசோட வர இருந்த குபேரன் ஜெயிலில் இருக்கார். ஒன்னும் இல்லாதவ தான் வீட்டில் இருக்கா என மீனாவை ஜாடை பேசுகிறார்.
இதில் கடுப்பான மீனா ஜாடை மடையா என்ன தானே சொல்றீங்க என்கிறார். இதற்கு விஜயா ஆமாடி உன்னை தான் சொல்றேன் என்றார். நான் என்ன பண்ணேன் என மீனா கேட்கிறார். ஸ்ருதி அவ அம்மா வீட்டுக்கு போனதுக்கு நீ தான் காரணம் எனப் பழி போடுகிறார்.
இதையும் படிங்க: அடடா மழைடா!.. தமன்னா எப்படி இருக்காரு பாருங்க!.. பையா 2 ஸ்டார்ட் பண்ற வழிய பாருங்க லிங்குசாமி!..
மேலும், நீ மட்டும் அவள் ரூமுக்கு போய் அந்த செயினை எடுக்காமல் இருந்திருக்கலாம். இவ்வளவு பிரச்சினையே வந்திருக்காது என்கிறார். நான் ஸ்ருதியை கூப்பிட தான் நான் போனேன். செயினை திருட இல்ல என்று சொல்கிறார். இதற்கு விஜயா யாருக்கு தெரியும் என நக்கல் பேசுகிறார்.
இதில் கடுப்பான அண்ணாமலை, விஜயாவிடம் உன்னால் தான் இந்த வீட்ல நிம்மதியே போச்சு. யாரையும் நிம்மதியா இருக்க விடமாட்டியா எனக் கேட்கிறார். இதற்கு விஜயா இதுங்களால தான் நிம்மதி போச்சு என்கிறார். மீனா, சரி ஸ்ருதி கோவிச்சிக்கிட்டு வீட்டுக்கு போய்ட்டாங்க. நீங்க போன் பண்ணி பேசுனீங்களா? நான் அவங்கள போய் நேர்ல பார்த்துட்டு வந்தேன் என்று சொல்லி பல்ப் கொடுக்கிறார்.
அண்ணாமலை நீ போய் ஸ்ருதியை பார்த்தியா? என்னம்மா சொன்னங்க எனக் கேட்க தெரியலை மாமா. வீட்டுக்கு வருவாங்கன்னு நினைக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு முத்து மற்றும் மீனா ரூமுக்குள் இருக்க இப்ப எல்லாம் என்கிட்ட சொல்லாமலே பல சமாதான வேலைகள் நடக்குது என்கிறார். நீங்க மட்டும் என்கிட்ட சொல்லிட்டா ரவியை பார்த்தீங்க என்று மீனா லாக் போடுகிறார்.
இதையும் படிங்க: அக்ஷய் குமாருக்கு இந்த முறையும் வசூலில் பலத்த அடி!.. அடுத்து சூர்யா படம் என்ன ஆகப்போகுதோ..
இதையடுத்து ரோகினி பியூட்டி பார்லரில் இருக்கும்போது பி ஏ விசித்ரன் அவரை பார்க்க வருகிறார். எனக்கு அடுத்த கல்யாணம். அதுக்கு ஒரு லட்சம் செலவு ஆகும் என்கிறார். அதுக்கெல்லாம் என்கிட்ட காசு இல்ல என்கிறார். நான் உன்னை மாதிரி சொல்லாம பண்ணிக்கலை.
எல்லாம் சொல்லி தான் இரண்டாம் கல்யாணம் செஞ்சிக்க போறேன் என்கிறார். காசு தரலைனா உங்க வீட்டில் உண்மையை போட்டு உடைச்சிடுவேன். இந்த நேரத்தில் மனோஜ் வர, விசித்ரனை காசு தருவதாக சொல்லி அனுப்பி வைக்கிறார் ரோகிணி. மனோஜ் வந்து கனடா போவதற்கு காசு வேண்டும் என்கிறார்.
என்ன பணம் கேட்டுக்கிட்டே இருக்கீங்க? நான் என்ன பணம் காக்கும் மெஷனா எனக் கடுப்படிகிறார். பின்னர் வீட்டில் போய் கேட்க சொல்கிறார். முத்துவுக்கு வீட்டை வச்சி தந்தாங்கள? அதுமாதிரி உங்க அம்மாக்கிட்ட கேளு என ஏத்திவிட்டு அனுப்புகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: KPY பாலாவின் திருமணத்திற்கு வந்த திடீர் சிக்கல்!.. அட இவருக்கா இப்படி நடக்கணும்!..