வீட்டுக்கு வந்த ரவி, ஸ்ருதி… ஷாக்கான ரோகிணி… இன்னொரு கலவரத்தை எதிர்பார்க்குறோம் பாஸ்!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் ஷாக்காகி நிற்கின்றனர். மனோஜ் எங்க அம்மா காசு கொடுக்கலைனு சொல்லிட்டாங்க. நான் என்ன செய்றது. அதான் இப்படி செஞ்சேன் என்கிறார். ரோகிணி எதுவும் யோசிக்கலாம் என ரூமுக்குள் அழைத்து செல்கிறார்.
ரூமுக்குள் செல்லும் மனோஜை போட்டு அடிக்கிறார் ரோகிணி. நான் உன்னை எப்படியும் விட்டுட மாட்டேன். வேற எதையும் யோசிக்கலாம் எனக் கூறுகிறார். அடுத்ததாக, சுதா ஸ்ருதி சென்றதால் கவலையில் இருக்கிறார். அப்போ வரும் வாசுதேவன் இது நடக்கும்னு தெரியும். அவ எப்பையும் இப்படி தானே.
இதையும் படிங்க: தளபதி69 படத்தின் ஹீரோயின் இவரா? அடுத்த இரண்டாவது இன்னிங்ஸா இருக்குமே!..
வேணும் சொல்லுவா அப்புறம் வேண்டாம் சொல்லிடுவா? பிடிச்சதை அப்புறம் பிடிக்கலைனு சொல்லிடுவா தானே. இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். அப்போ அவளை மறுபடி அழைச்சிட்டு வந்திடலாம் என்கிறார். ரவியை ஹோட்டலில் வந்து பார்க்கும் ஸ்ருதி, வா வீட்டுக்கு போகலாம் என்கிறார். உங்க வீட்டுக்கு நான் வரலை என ரவி கூற, உங்க வீட்டுக்கு தான் என்கிறார். இதனால் ரவி ஷாக்காகி விடுகிறார்.
பின்னர் முத்து செய்த உதவியை ஸ்ருதி சொல்கிறார். இருந்தும் உங்க அண்ணன் மேல எனக்கு கோபம் போகலை. ஆனால் இப்படியே இருக்க முடியாது என வீட்டுக்கு அழைத்து செல்கிறார். வீட்டுக்கு வரும் ஸ்ருதி மற்றும் ரவியை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார். அவர்கள் வருகையால் தனக்கு தொல்லை வருமே என நினைத்து ரோகிணி கவலையாகி விடுகிறார். மீண்டும் பழைய விஷயத்தினை கிளற பார்க்க பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் எனத் தட்டி விடுகிறார் ஸ்ருதி. இதனால் ரோகிணிக்கு ஷாக்காகி விடுகிறது.
இதையும் படிங்க: குழந்தை சண்டையை மீண்டும் தொடங்கிய ஈஸ்வரி.. கோபிக்கு நேரம் சரியில்லை…
அவர்களை வருகையை எல்லாரும் கேக் வெட்டி ஊட்டி மகிழ்கின்றனர். பிரிந்து சேர்ந்தால் பிரச்னையாகும் குடும்பங்களுக்கு இடையே அதை ஒன்னுமே இல்லாமல் செய்த ஸ்ருதியை நினைத்து அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். மாடியில் மனோஜ், ரவி மற்றும் முத்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
மனோஜ் மற்றும் ரவி கல்யாண வாழ்க்கை நினைத்து புலம்பிகொண்டு இருக்கின்றனர். முத்து கல்யாணம், கல்யாணம்னு அழைஞ்சிக்கிட்டு இப்போ இதெல்லாம் தேவையா என்கிறார். இதையடுத்து, மண்டபத்தில் நடந்ததை பேச தொடங்க, அதை பேச வேண்டாம் என மனோஜ் ரவியை அழைத்து செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.