ரோகிணியை வச்சு செய்யும் விஜயா… மனோஜை பார்த்து பம்மிய ஜீவா… நல்லா இருக்கே!..
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் குடும்பமாக எல்லாரும் கோயிலுக்கு வருகிறனர். காரில் இருக்கும் ஜீவாவிடம் சொல்லிவிட்டு முத்துவும் கோயிலுக்குள் செல்கிறார். பிள்ளையார் சன்னதியில் ரோகிணி தோப்புக்கரணம் போட்டு கொண்டுள்ளார்.
கோர்ட்டில் வாதாடாமல் இங்கையே இருந்தால் எல்லாம் சரியாகிடுமா? மலேசியா சம்மந்தி வந்துடுவாரா? என்னை வேற வர வச்சிட்டீங்க என முத்து திட்ட விஜயா சாமி விஷயம் அமைதியா இரு என அடக்குகிறார். ரோகிணி தோப்புக்கரணம் போட்டாச்சு. கிளம்பலாமா எனக் கேட்க இப்போதான் ஆரம்பிச்சிருக்கேன் என்கிறார் விஜயா. பின்னர் அம்மன் சன்னதிக்கு போய் சூடம் ஏத்தணும் என்க தட்டுல தானே எனக் கேட்கிறார் மனோஜ்.
இதையும் படிங்க: கோயிலில் எளிமையாக நடந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் திருமணம்!.. மணமகள் யாருன்னு பாருங்க!..
இல்லை கையில் என்கிறார் விஜயா. இதில் ஷாக்கான ரோகிணி வேண்டாம் ஆண்ட்டி எனப் பதறுகிறார். ஆனால் விஜயா அவர் கையை பிடித்து சூடம் ஏற்றி சுத்த வைக்க ரோகிணி அலறுகிறார். பின்னர் அங்கப்பிரதஷனம் செய்ய வைக்கிறார். முத்து எங்க அம்மா உன்னை கொடுமை படுத்துவாங்கனு பார்த்தா, பார்லர் அம்மாவை இவ்வளோ கொடுமை செய்றாங்க. சீக்கிரம் வீட்டை விட்டு ஓடிடும் நினைக்கிறேன் என்கிறார்.
அப்போ கால் வந்ததாக மனோஜ் வெளியில் வந்து பேசிக்கொண்டு இருக்கிறார். அவரை ஜீவா பார்த்துவிட மறைந்து உட்கார்ந்து கொள்கிறார். அப்போ அங்கு வரும் முத்து, மனோஜை நகர்த்துவிட்டு காரை எடுத்து கொண்டு கிளம்புகிறார். சாமி கும்பிட வரும்போது ஐயர், ரோகிணியிடம் அவங்க அப்பா பெயர் என்ன எனக் கேட்க முழிக்கிறார். பின்னர் தனசேகர் என சமாளிக்க மேஷ ராசி, பூச ராசி என உளறுகிறார். ஐயர் அந்த நட்சத்திரம் வராதே என்கிறார்.
இதையும் படிங்க: இயக்குனரை பங்கம் பண்ணலாம்னு வந்த நிருபர்… வெச்சு செய்த கார்த்தி… நடந்தது இதுதான்..!
பின்னர் அஸ்வினி என மாற்றி பேசி சமாளிக்கிறார். அதையடுத்து ரோகிணி காப்பு கட்டி பல கட்டுப்பார்களை சொல்கிறார். இதனால் ரோகிணி உள்பட குடும்பத்தினர் ஷாக் ஆகின்றனர். இதையடுத்து பார்லரில் வித்யாவிடம் புலம்பிக்கொண்டு இருக்கிறார் ரோகிணி. அப்போ வித்யாவுக்கு கிரில் சிக்கன் ஆர்டர் வர அதை சப்பிக்கொண்டு சாப்பிடுகிறார். எனக்கும் கொடு என ரோகிணி கேட்க இந்த விரதத்தை பயன்படுத்தி உடம்பை குறை எனக் கலாய்க்கிறார்.
வீட்டில் உடம்பெல்லாம் வலிப்பதாக ரோகிணி கூற மனோஜ் மசாஜ் செய்வதாக சொல்லி பிடித்துவிடுகிறார். அப்போ வரும் விஜயா இன்னும் 48 நாளைக்கு தள்ளி தான் இருக்கணும் எனத் திட்டிவிட்டு போகிறார். வீட்டுக்கு வரும் ஸ்ருதி, நான்வெஜ் கேட்க அதெல்லாம் சாப்பிடக்கூடாது என்கிறார். ஸ்ருதி நான் வெளியில் போறேன் எனக் கூற அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடக்கூடாது. நான் நாளைக்கு செஞ்சி தரேன் என்கிறார் மீனா.
பின்னர் ரோகிணிக்கு பிடிச்சதை செஞ்சி கொடு என விஜயா, மீனாவிடம் சொல்கிறார். அம்மா சொன்னதை அவங்களே மறந்துட்டாங்க. அவங்களுக்கு பிடிச்சதை அவங்க தான செஞ்சி சாப்பிடணும்னு சொன்னாங்க என்கிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சி ஆகுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: காத்தடிச்சு தூக்கிய குட்டி பாவாடை!.. ஜெயம் ரவி ஜோடி மானமே போயிருக்கும்!.. என்ன ஆச்சு தெரியுமா?..