என்னாங்கடா ஒரே பாசமழை பொழியுது.. விஜயா வாய் சும்மா இருக்காதே..! சண்டைக்கு நிக்குமே..!

by Akhilan |
என்னாங்கடா ஒரே பாசமழை பொழியுது.. விஜயா வாய் சும்மா இருக்காதே..! சண்டைக்கு நிக்குமே..!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயாவை திட்டிக்கொண்டு இருக்கிறார் பாட்டி. உன்னால தான் அவருக்கு நெஞ்சு வலி வந்துச்சு எனவும் கூறுகிறார். மீனாவிடம் பாட்டி முத்துவை கூப்பிட சொல்கிறார். நீங்க அடிச்சதால கோபத்துல உட்கார்ந்து இருக்கார்.

அப்படியா கதவை திறந்து வை. அவனை எப்படி வர வைக்கணும்னு எனக்கு தெரியும் எனக் கூறி எல்லாருக்கும் சீம்பாலை கொடுத்து சாப்பிடுங்க என்கிறார். இதை கேட்ட முத்து காலி செய்துடுவாங்க என ஓடி வந்து விடுகிறார். இனிமே எதையாது மறைச்ச அப்போ இருக்கு என பாட்டி மிரட்டுகிறார். வேணாம் நீ விட்டதே வலிக்குது என பம்முகிறார் முத்து.

இதையும் படிங்க: உங்க வீட்ல ஒண்ணுன்னா ஓடி வரமாட்டீங்க.. சிம்பு, தனுஷ், விஷால், சூர்யாவை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்!

பின்னர் விஜயா எல்லாரையும் சாப்பிட கூப்பிடு என மீனாவிடம் சொல்ல, அதக்கூட நீ செய்ய மாட்டியா என்கிறார். நான் என்ன செஞ்சேன். எல்லாம் இந்த மீனா தான் அத்தைக்கிட்ட போட்டு விட்டுட்டா. ஒரு மருமக வீட்டு விஷயத்தை வெளியில் சொல்லலாமா எனக் கோபப்படுகிறார். அந்த நேரத்தில் பாட்டி வந்து விடுகிறார்.

நீ பெரிய நல்ல மருமக தான் என விஜயாவை திட்டுகிறார். பின்னர் அனைவரையும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம் என பாட்டி சொல்கிறார். இடம் பத்தாது எனச் சொல்ல பரவாயில்லை அட்ஜஸ்ட் செய்து உட்காரலாம் எனக் கூறி மீனாவை அமர சொல்கிறார். அப்போ யாரு பரிமாறுவா எனக் கேட்க ஒன்னா தான் சாப்பிடணும்னு கறாராக சொல்லி விடுகிறார்.

இதையும் படிங்க: 27 எம்.எல்.ஏக்களை காக்க வைத்த புரட்சிக்கலைஞர்! எல்லாம் தம்பி விஜய்க்காகத்தான் – அமீர் சொன்ன சீக்ரெட்

மூன்று பேரன்களை கொடுத்து இப்போ பேத்திகளும் வந்துட்டாங்க. நீங்க எல்லாரும் பொங்கலுக்கு ஊருக்கு வரணும் என்கிறார். முத்து நான் ரெடி என்க எல்லாரும் வரணும் என அழுத்தி சொல்கிறார் பாட்டி. ரோகினி கடை இருக்குனு வராம இருக்காதம்மா எனக் கூற லீவ் தான் பாட்டி வருவேன் என்கிறார். மனோஜ் வேலைனு வராம இருக்காத என்க அவனுக்கு எங்க வேலை என விஜயா உளறி பின்னர் சமாளிக்கிறார்.

அங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்க எனக் கூற எனக்கு யாரு பர்ஸ்ட் கொள்ளுப்பேரனை தராங்களோ அவங்க பிள்ளைக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை எழுதி வைக்க போறேன் என்கிறார். இதை கேட்ட ரோகினி கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story