சூடுப்பிடிக்க ஆரம்பிச்சிட்டு போல… மருமகளை தப்பா கேட்ட விஜயா.. முத்துவுக்கு தெரிந்தால் பிரச்னை வெடிக்குமோ..?

by Akhilan |
சூடுப்பிடிக்க ஆரம்பிச்சிட்டு போல… மருமகளை தப்பா கேட்ட விஜயா.. முத்துவுக்கு தெரிந்தால் பிரச்னை வெடிக்குமோ..?
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு கிளம்புகிறார். மீனாவை அழைத்து ரூமுக்குள் எதுவும் எடுக்கணுமா என்கிறார். எதும் இல்லை. துவைக்க துணி மட்டும் எடுக்கணும் என்கிறார். அதை எடுத்துக்கோ எனக் கூறி மீனாவை வெளியில் அழைத்து வருகிறார்.

முத்து ரூமை பூட்ட விஜயா ஏன்டா என்கிறார். நான் காரில் கூட தூங்கிப்பேன். ஆனா மீனா அத்தனை வேலை செஞ்சிட்டு ஹாலில் படுக்கணுமா? ஓடிப்போய் கல்யாணம் செஞ்சவங்க சொகுசா இருக்கணும்னா அவங்களை மாடியில் படுக்க வையுங்க என்கிறார்.

இதையும் படிங்க: அப்பாவ மிஞ்சிய புள்ள! பாட்டு வேணும்னா இங்க வரனும் – யுவன் சங்கர் ராஜாவால் ‘தளபதி 68’க்கு வந்த சிக்கல்

விஜயா சொல்வதை கேட்காமல் முத்து சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார். இதனால் ரவியும் இங்கு தனக்கு மரியாதையே இல்லை. நாங்க வெளியில் போவதாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார். இதனால் விஜயா தன் கோபத்தினை மீனா பக்கம் திருப்புகிறார்.

நீ தான் எல்லாம் அவனுக்கு சொல்லி கொடுக்குற? உன்னால அவன் இல்லாம தூங்க முடியாதா? அவனை ஒருநாள் நீ இல்லாம பழக்கி வச்சிருக்கியா என்கிறார். இதனால் மீனாவுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது. இதனை ரோகினி, மனோஜ் ஒட்டுக்கேட்டு கொண்டுள்ளனர்.

வெளியில் போன ரவி வீட்டுக்குள் வந்து பெட்டியை எடுக்க நாங்க பழைய வீட்டுக்கே போறோம் என்கிறார். விஜயா அவரை சமாதானப்படுத்துகிறார். ஸ்ருதிக்கிட்ட சொல்லாத சமாளிச்சிடலாம் என்கிறார். ரோகினி, மனோஜ் இப்போ வந்து ரவியை சமாதானம் செய்கின்றனர்.

இதையும் படிங்க: தனது அப்பா கெட்டப்பில் ரஜினி நடித்த படம்!.. அப்பா மேல இவ்வளவு பாசமா?!..

மாடிக்கு வரும் மீனா முத்துவுக்கு கால் செய்ய போனை கையில் வைத்துக்கொண்டே எடுக்காமல் இருக்கிறார். அடுத்து ஸ்ருதி டப்பிங் ஸ்டுடியோவில் பேசிக்கொண்டு இருக்கிறார். அங்கிருப்பவர் உங்க லைஃபில் வில்லி யார் எனக் கேட்க அதெல்லாம் இல்லை. ஒரு வில்லன் தான் இருப்பதாக கூறுகிறார்.

அப்போது அங்கு வரும் ரவி வெளியில் போய் ரெஸ்டாரெண்டில் தங்கலாமா என்கிறார். என்ன ஆச்சரியமா இருக்கு இப்படிலாம் கேட்குற? இதற்கு ரவி வீட்டில் நடந்த விஷயத்தினை கூறுகிறார். ரூம் அவங்களோடது அவங்க எடுத்துக்கிட்டாங்க. இதுல என்ன இருக்கு என்கிறார்.

அப்போ உனக்கு கோபம் இல்லையா எனக் கேட்க அதெல்லாம் இல்லை. ஷாப்பிங் முடிச்சிட்டு வீட்டுக்கு போலாம் எனக் கேட்க ரவி யார் வீட்டுக்கு எனக் கேட்க உங்க வீட்டுக்கு தான் என ஸ்ருதி கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: மீண்டும் பிக் பாஸ் பிரபலத்துக்கு சான்ஸ் கொடுத்த அஜித்குமார்!.. அவருக்கு ஈக்வலா செம ஸ்லிம்மாகிட்டாரே!..

Next Story